ராகுல்காந்தியுடன் ஏற்கனவே நடைபயணத்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, பாரத் ஜோடோ யாத்திரைக்கு காஷ்மீரில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் டுவிட்டர் பதிவில், வயது வித்தியாசமின்றி அனைத்து பாலினத்தவர்களும் நடைபயணத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.