இமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. சாலை முழுவதும் பனித்துகள்கள் கொட்டிக்கிடப்பதால் வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது.
2/ 8
சோலாங் நல்லாவில் இருந்து அடல் சுரங்கப்பாதை வரையிலான சாலையை பனி ஆக்கிரமித்ததால், வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் பரிதவித்தனர்.
3/ 8
இதையடுத்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார், சுற்றுலாப்பயணிகளை மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
4/ 8
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் காலையில் நிலவிய பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.
5/ 8
டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் குளிருக்கு மத்தியில், கனமழை பெய்தது. குருகிராமில் பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
6/ 8
டெல்லியில் நிலவும் கடும் குளிரால், வீடில்லாதவர்கள் இரவு நேர கூடாரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். சராய் கலே கான் பகுதியில் உள்ள கூடாரத்தில், 140 பேர் தங்குவதற்கு இடவசதி இருந்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 70 பேர் மட்டும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
7/ 8
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நிலவும் கடும் பனிப்பொழிவால் காணும் இடமெங்கும் வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.
8/ 8
காஷ்மீரில் நிலவும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
18
வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு