முகப்பு » புகைப்பட செய்தி » புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா : முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா : முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு

New Parliament Building : புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் கலந்துகொள்ளத் தலைவர்கள் முதல் முக்கிய பிரபலங்களை வரை பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 • 17

  புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா : முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு

  டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா பெயரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் மே 28 ஆம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாநில முதலமைச்சர்கள் உட்படப் பல முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா : முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு

  திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்கள் முறையே லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் முன்னாள் சபாநாயகர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 37

  புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா : முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு

  இரு அவைகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர, முன்னாள் மக்களவைத் தலைவர்கள் மற்றும் முன்னாள் மாநிலங்களவை தலைவர் ஆகியோர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 47

  புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா : முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு

  மே 28 இல் நடைபெறும் விழாவில் தற்போதைய மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் கலந்து கொள்வார். இது தவிர, இந்திய அரசின் அனைத்து அமைச்சகங்களின் செயலாளர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 57

  புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா : முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு

  புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவிற்கு, தலைமை கட்டிட வடிவமைப்பாளர் பிமல் படேல் மற்றும் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 67

  புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா : முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு

  மேலும், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. தொடக்க விழாவின் போது மக்களவை சபாநாயகர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் உரை நிகழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய நாடாளுமன்ற கட்டிடம் 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கட்டிடமாகவும், உறுப்பினர்கள் அமர்வதற்கு போதுமான இடமில்லாமலும் இருப்பதால், சுமார் 200 கோடி செலவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 77

  புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா : முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு

  புதிய நாடாளுமன்றத்திற்காக டிசம்பர் 10, 2020 அன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இரு அவைகளைக் கொண்டு பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. மக்களவையில் 888 உறுப்பினர்கள் அமரும் வண்ணமும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்கள் அமரும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES