உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலானது இந்தியாவே உற்று நோக்கும் தேர்தல் களமாக மாறியிருக்கிறது. எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் இத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முனைப்போடு முதல்வர் யோகி ஆதித்தநாத் தலைமையிலான பாஜக செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாஜகவுக்கு கடுமையான சவால் அளிக்கும் வகையிலான தேர்தல் பணியில் ஈடுபட்டு பாஜகவினருக்கு சவால் விடுகிறது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி.
இதற்கிடையே, சமீப நாட்களாக பாஜகவில் இருந்து பெரும்பாலான முக்கிய பிரமுகர்கள் வரிசையாக சமாஜ்வாதியில் இணைந்து வந்தனர். குறிப்பாக கடந்த வாரத்தில் மட்டும் ஸ்வாமி பிரசாத் மெளர்யா, தரம் சிங் சைனி, தாரா சிங் செளகான் போன்ற யோகி அமைச்சரவையில் இடம்பிடித்திருந்த அமைச்சர்கள் திடீரென பாஜகவில் இருந்து விலகி அகிலேஷ் கட்சியில் இணைந்தனர்.
இவர்கள் மட்டுமல்லாமல் வினய் ஷாக்யா, ரோஷன் லால், முகேச் வெர்மா, பகவதி சாகர் போன்ற பாஜக எம்.எல்.ஏக்கள் பலரும் சமாஜ்வாதியில் தங்களை இணைத்துக் கொண்டனர்..
பாஜகவில் இணைந்தது குறித்து அபர்னா பேசுகையில், தான் மோடியால் ஈர்க்கப்பட்டதாகவும், தன்னைப் பொறுத்தவரையில் நாடு தான் உயர்ந்தது. நாட்டுக்கு சேவை செய்வதற்காக நான் வந்துள்ளேன் என்றார். இவர் முன்னதாகவே மோடி குறித்து பாசிட்டிவாக பேசி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டது ஏற்கனவே பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.