ஹோம் » போடோகல்லெரி » இந்தியா » ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தம்: ஆட்டம், பாட்டம் என களைகட்டிய அம்பானி வீடு

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தம்: ஆட்டம், பாட்டம் என களைகட்டிய அம்பானி வீடு

ஆனந்த் அம்பானியின் சகோதரி இஷா நிச்சயதார்த்த நிகழ்வை அறிவிக்க , குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்ட்டும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

 • 16

  ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தம்: ஆட்டம், பாட்டம் என களைகட்டிய அம்பானி வீடு

  இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்செண்ட் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது. என்கோர் ஹெல்த்கேர் CEO விரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் தான் ராதிகா மெர்ச்சென்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 26

  ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தம்: ஆட்டம், பாட்டம் என களைகட்டிய அம்பானி வீடு

  ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் நண்பர்கள் சூழ இன்று மாலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்றுவருகிறது. குஜராத்தை சேர்ந்த இந்துக்களால் கடைபிடிக்கப்படும் கோல் தானா (Gol Dhana) மற்றும் சுனரி விதி (Chunari Vidhi) சடங்குகளுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 36

  ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தம்: ஆட்டம், பாட்டம் என களைகட்டிய அம்பானி வீடு

  இதில் கோல் தனா என்பது நிச்சயதார்த்தத்திற்கு முன் கடைபிடிக்கப்படும் ஒரு சடங்கு. மனமகளின்குடும்பத்தினர் மனமகனின் வீட்டுக்கு பரிசுகள், இனிப்புகளுடன் வருவர். பின்னர் மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்வர். மோதிரம் மாற்றிக்கொண்டதற்கு பின் மணமக்கள் இருவரும் குடும்பத்தின் மூத்தவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவர்.

  MORE
  GALLERIES

 • 46

  ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தம்: ஆட்டம், பாட்டம் என களைகட்டிய அம்பானி வீடு

  பின்னர் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட் உள்ளிட்ட இருவரது குடும்பத்தினர் நிச்சயதார்த்தம் நன்றாக நடைபெறவேண்டும் என கிருஷ்ண பகவானை வேண்டிக்கொண்டனர். பின்னர் நிச்சயதார்த்த நிகழ்வு நடக்கும் இடத்துக்கு சென்று, கணேஷ் பூஜையுடன் நிச்சயதார்த்தத்தை தொடங்கினர்.

  MORE
  GALLERIES

 • 56

  ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தம்: ஆட்டம், பாட்டம் என களைகட்டிய அம்பானி வீடு

  அதனைத் தொடர்ந்து திருமண பத்திரிகை வாசிக்கப்பட்டது. பின்னர் பரிசுகளையும் இனிப்புகளையும் இரு குடும்பத்தினரும் மாற்றிக்கொண்டனர். பின்னர் நீதா அம்பானி தலைமையில் அம்பானி குடும்பத்தினர் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  MORE
  GALLERIES

 • 66

  ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தம்: ஆட்டம், பாட்டம் என களைகட்டிய அம்பானி வீடு

  பின்னர் ஆனந்த் அம்பானியின் சகோதரி இஷா நிச்சயதார்த்த நிகழ்வை அறிவிக்க , குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்ட்டும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். பின்னர் குடும்பத்தின் மூத்தவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.

  MORE
  GALLERIES