முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியல்.. லிஸ்டில் தமிழ்நாடு இருக்கா?

தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியல்.. லிஸ்டில் தமிழ்நாடு இருக்கா?

நாட்டின் தூய்மையான 6 ரயில் நிலையங்களின் படங்களை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

  • 110

    தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியல்.. லிஸ்டில் தமிழ்நாடு இருக்கா?

    நாட்டில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் மாபெரும் பொதுப் போக்குவரத்து சேவை துறையாக இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது. இவ்வளவு அதிகமான மக்கள் பயன்படுத்தும் ரயில்களும், ரயில் நிலையங்களும் தூய்மையாக பராமரிக்கப்பட்ட வேண்டும் தானே! குறிப்பாக, சுகாதாரம் மேம்பட்ட நிலையில் இருந்தால் தான் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் முகம் சுளிக்காமல் செல்ல முடியும்.

    MORE
    GALLERIES

  • 210

    தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியல்.. லிஸ்டில் தமிழ்நாடு இருக்கா?

    இதனால் தான் கடந்த 2019ஆம் ஆண்டில் ‘தூய்மையான ரயில், தூய்மையான பாரதம்’ என்ற திட்டத்தை இந்திய ரயில்வே துறை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையங்களில் தூய்மை கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது முறையாக கண்காணிக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 310

    தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியல்.. லிஸ்டில் தமிழ்நாடு இருக்கா?

    பொதுவாக நாம் இதற்கு முன்பு ஒரு ரயில் நிலையத்திற்குச் செல்லும்போது, அங்கு நம் அனுபவம் எப்படி இருக்கும்? தரைதளங்கள், அமரும் இருக்கைகள் என பல இடங்களில் எச்சில் கறைகள் தென்படும். ஆனால், இவ்வாறு கண்ட இடத்தில் எச்சில் துப்புவதை கைவிட்டு, ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது குடிமக்கள் அனைவரின் பொறுப்பு மற்றும் கடமை ஆகும்.அதே சமயம், எண்ணற்ற மக்களின் பயன்பாடு காரணமாக இயல்பாகவே அழுக்கு ஏறக்கூடிய தரைதளங்கள், கழிவறைகள், ரயில்கள் போன்றவற்றை பராமரித்து, தூய்மையாக வைத்துக் கொள்வது ரயில்வே நிர்வாகத்தின் கடமையல்லவா!

    MORE
    GALLERIES

  • 410

    தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியல்.. லிஸ்டில் தமிழ்நாடு இருக்கா?

    அந்தக் கடமையை சிறப்பாக செய்யும் ரயில் நிலையங்களை அவ்வபோது அடையாளம் கண்டு இந்திய ரயில்வே பாராட்டி வருகிறது. வெறும் வார்த்தைகளால் அல்லாமல் பல்வேறு தர நிலைகளின் அடிப்படையில், ஒரு ரயில் நிலையத்தின் தூய்மை நிலை கணக்கிடப்படுகிறது. குறிப்பாக திடக் கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், எரிபொருள் மேலாண்மை, தூய்மை நடவடிக்கைகள் போன்றவற்றின் அடிப்படையில் தூய்மையான ரயில் நிலையங்கள் பட்டியலிடப்படுகின்றன. அந்த வகையில், நாட்டின் தூய்மையான 6 ரயில் நிலையங்களின் படங்களை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 510

  • 610

    தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியல்.. லிஸ்டில் தமிழ்நாடு இருக்கா?

    பாட்னா ரயில் நிலையம் : பீகார் என்றால் பின்தங்கிய மாநிலம் என்ற ரீதியில் தான் பரவலான செய்திகளில் நாம் படித்திருப்போம். ஆனால், இந்த பொது நம்பிக்கைக்கு மாறாக, பீகார் மாநிலத் தலைநகரான பாட்னாவில் உள்ள ரயில் நிலையம் தூய்மைக்கான பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 710

    தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியல்.. லிஸ்டில் தமிழ்நாடு இருக்கா?

    போபால் ரயில் நிலையம்: மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையம், தூய்மை பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்கு சுத்தம் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் உலக தரத்தில் அமைந்துள்ளன.

    MORE
    GALLERIES

  • 810

    தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியல்.. லிஸ்டில் தமிழ்நாடு இருக்கா?

    மும்பை ரயில் நிலையம் : நாட்டின் வர்த்தகத் தலைநகராகக் கருதப்படும் மும்பை மாநகரில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையமும் தூய்மை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. குறிப்பாக, மிக அதிகமான பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில் தூய்மையும், சுகாதாரமும் கடைப்பிடிக்கப்படுவது ஆச்சரியத்தை தருகிறது.

    MORE
    GALLERIES

  • 910

    தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியல்.. லிஸ்டில் தமிழ்நாடு இருக்கா?

    ஜெய்சால்மார் ரயில் நிலையம் : தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியலில், ராஜஸ்தானில் இருந்து இடம்பெறும் இரண்டாவது ரயில் நிலையம் இது. இங்கு பயணிகள் வருகை குறைவு என்றாலும், ராஜஸ்தான் மாநிலத்தின் மேற்குப் பகுதியை இணைக்கக் கூடிய இடமாக இது இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 1010

    தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியல்.. லிஸ்டில் தமிழ்நாடு இருக்கா?

    கௌஹாத்தி ரயில் நிலையம்: இது கொஞ்சம் ஆச்சரியமான தகவல் தான். நாட்டின் பெருநகரங்களான டெல்லி, சென்னை, பெங்களூரு போன்ற இடங்களில் உள்ள ரயில் நிலையங்கள் கூட தூய்மை நடவடிக்கையில் பின்தங்கி இருக்கும்போது, வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் உள்ள கௌஹாத்தி ரயில் நிலையம் இந்தப் பட்டியலில் 6ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப்பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை.

    MORE
    GALLERIES