முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » ”மருத்துவமே முழுநேரப் பணி” - வடகிழக்கு இந்தியாவிலிருந்து கொரோனா களவீரராக சேவையாற்றும் முதல் திருநங்கை மருத்துவர் பியான்சி..

”மருத்துவமே முழுநேரப் பணி” - வடகிழக்கு இந்தியாவிலிருந்து கொரோனா களவீரராக சேவையாற்றும் முதல் திருநங்கை மருத்துவர் பியான்சி..

மருத்துவர் பியான்சி, திருமணம் செய்து கொள்வதில் தற்போது வரை விருப்பம் இல்லை என்றும், என்னுடைய மருத்துவத் துறையில் கவனம் செலுத்துவதே முழு நேரப் பணி எனவும் கூறியுள்ளார்.

 • 17

  ”மருத்துவமே முழுநேரப் பணி” - வடகிழக்கு இந்தியாவிலிருந்து கொரோனா களவீரராக சேவையாற்றும் முதல் திருநங்கை மருத்துவர் பியான்சி..

  கொரோனா நமக்கு  சில நன்மைகளையும் அளித்துள்ளது என்பதற்கு இந்த செய்தியும் ஒரு சான்றுதான். ஆம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான பியான்சி லைஷ்ராம் என்ற திருநங்கை மருத்துவராகியிருக்கிறார். அதுவும் கொரோனா பேரிடரில் மக்களைக் காக்க களம் இறங்கியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 27

  ”மருத்துவமே முழுநேரப் பணி” - வடகிழக்கு இந்தியாவிலிருந்து கொரோனா களவீரராக சேவையாற்றும் முதல் திருநங்கை மருத்துவர் பியான்சி..

  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் பியான்சி எம்.பி.பி.எஸ்  3-ஆம் ஆண்டு படித்த போதுதான் தன்னை ஒரு திருநங்கையாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு எட்டாம் வகுப்புப் படிக்கும் போதே தான் ஒரு பெண்ணாக உணர்ந்ததாக பேட்டியில் கூறியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 37

  ”மருத்துவமே முழுநேரப் பணி” - வடகிழக்கு இந்தியாவிலிருந்து கொரோனா களவீரராக சேவையாற்றும் முதல் திருநங்கை மருத்துவர் பியான்சி..

  இம்பாலில் கக்வா லீப்ரக்பம் லைகாய் என்ற ஊறிலிருந்து தற்போது ஷிஜி மருத்துவமனையின் மருத்துவராகியிருக்கிறார் எனில் அது அத்தனை சாதாரண விஷயமல்ல. அதுவும் இவருக்கு முன் 3 சகோதர , சகோதரிகள் உள்ளனர். அவருடைய அப்பா பேருந்து ஓட்டுநர்.

  MORE
  GALLERIES

 • 47

  ”மருத்துவமே முழுநேரப் பணி” - வடகிழக்கு இந்தியாவிலிருந்து கொரோனா களவீரராக சேவையாற்றும் முதல் திருநங்கை மருத்துவர் பியான்சி..

  இவர்களின் வீட்டில் இந்த செய்தியைக் கூறிய போது அவருடைய தந்தை தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அவருடைய மூத்த அண்ணனோ முற்றிலும் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.பின் பல கட்ட மன உளைச்சலுக்குப் பின் 2016-ஆம் ஆண்டு தன்னை திருநங்கையாகஅறிவித்துக்கொண்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 57

  ”மருத்துவமே முழுநேரப் பணி” - வடகிழக்கு இந்தியாவிலிருந்து கொரோனா களவீரராக சேவையாற்றும் முதல் திருநங்கை மருத்துவர் பியான்சி..

  பின் 2013 ஆண்டு திருநங்கைகளுக்கான வடகிழக்கு அழகிப் போட்டியில் பங்கேற்ற போது பியான்சி என தன் பெயரை மாற்றிக்கொண்டுள்ளார். இதற்கான அறுவை சிகிச்சையை புதுச்சேரியில்தான் செய்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 67

  ”மருத்துவமே முழுநேரப் பணி” - வடகிழக்கு இந்தியாவிலிருந்து கொரோனா களவீரராக சேவையாற்றும் முதல் திருநங்கை மருத்துவர் பியான்சி..

  டெல்லியில் உள்ள பாபு ஜக்ஜீவன்ராம் நினைவு மருத்துவமனையில் அவர் பணியாற்றிய பிறகு, NEIGRIHMS, ஷில்லாங்கில் ஒரு ஆண்டு பணியாற்றியுள்ளார். அதன் பிறகே அவருக்கு ஷிஜா மருத்துவமனையில் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது மருத்துவர்களுக்காக கொடுக்கப்படும் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 77

  ”மருத்துவமே முழுநேரப் பணி” - வடகிழக்கு இந்தியாவிலிருந்து கொரோனா களவீரராக சேவையாற்றும் முதல் திருநங்கை மருத்துவர் பியான்சி..

  பியான்சி அனைவரிடமும் அன்பாகப் பழகுபவர். நோயாளிகளையும் உறவுகள் போல் அணுகி சிகிச்சை அளிக்கிறார். கடின உழைப்பாளி என மணிப்பூர் திருநங்கைகளுக்கான ஆர்வலர் கூறுகிறார். மருத்துவர் பியான்சிக்கு திருமணம் செய்து கொள்வதில் தற்போது வரை விருப்பம் இல்லை என்றும், என்னுடைய மருத்துவத் துறையில் கவனம் செலுத்துவதே முழு நேரப் பணி எனக் கூறியுள்ளார்.

  MORE
  GALLERIES