ஆன்லைன் மோசடி செய்பவர்களின் சமீபத்திய இலக்காகி இருக்கிறார் மும்பையைச் சேர்ந்த 61 வயதான முதியவர் ஒருவர். இவர் பீர் வாங்குவதற்காக முயற்சித்த போது அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த 58,000 ரூபாயை இழந்திருக்கிறார்.
2/ 6
மோசடி நடந்தததே தெரியாமல் அடுத்த நாள் வங்கிக்கு சென்று பாஸ்புக்கை அப்டேட் செய்வதற்காக சென்ற போது அவருடைய வங்கிக் கணக்கில் வெறும் 724 ரூபாய் மட்டுமே இருந்தது. இதன் பிறகு தான் அவர் ஏமாற்றப்பட்டிருப்பதையே அறிந்து அதிர்ந்திருக்கிறார்.
3/ 6
கடந்த ஜூலை 16ம் தேதியன்று அந்த 61 வயதாகும் முதியவர் கூகுளில் தேடி மும்பை கெம்ப்ஸ் கார்னர் பகுதியில் இருந்த மதுபான கடையின் தொடர்பு எண்ணை எடுத்து அவர்களை தொடர்பு கொண்டு பீர் ஆர்டர் கொடுத்திருக்கிறார்.
4/ 6
இணையத்தில் மோசடி நபர்கள் பொதுவாக மக்களை ஏமாற்றுவதற்காக மளிகை, மதுபான கடைகள் பெயரில் தங்களுடையைய சொந்த மொபைல் எண்களை இப்படி கொடுப்பார்கள் என்பதை அறியாத அந்த முதியவரும் பீர் ஆர்டர் கொடுப்பதற்காக தொடர்பு கொண்டிருக்கிறார்.
5/ 6
எதிர்முனையில் கடையின் ஊழியர் போல காட்டிக்கொடு பேசிய நபர், பீர் ஆர்டர் பெறுவதற்கு முன்பணம் செலுத்த வேண்டுமென கூறி அவருடைய வங்கி கணக்கு விபரங்களையும், ஒன் டைம் பாஸ்வோர்டையும் பெற்று அந்தன் மூலம் 58,400 ரூபாயை சுருட்டிவிட்டார்.
6/ 6
வங்கிக்கு பாஸ்புக் அப்டேட் செய்ய சென்ற போது தான் மோசடி செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த அந்த முதியவர் இது குறித்து கம்தேவாலி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.