முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » ஒரு முள்ளங்கியின் எடை 5 கிலோ... ராட்சத முள்ளங்கியை பார்க்க விவசாயி வயலுக்கு படையெடுக்கும் மக்கள்!

ஒரு முள்ளங்கியின் எடை 5 கிலோ... ராட்சத முள்ளங்கியை பார்க்க விவசாயி வயலுக்கு படையெடுக்கும் மக்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயி ஒருவர் 5 கிலோ ராட்ச முள்ளிங்கியை சாகுபடி செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.

 • 17

  ஒரு முள்ளங்கியின் எடை 5 கிலோ... ராட்சத முள்ளங்கியை பார்க்க விவசாயி வயலுக்கு படையெடுக்கும் மக்கள்!

  கடைக்கோ சந்தைக்கோ சென்று நாம் ஒரு கிலோ முள்ளங்கி தாருங்கள், இரண்டு கிலோ முள்ளங்கி தாருங்கள் என வீட்டு சமையலுக்கு கேட்டு வாங்குவோம். ஆனால், இங்கு ஒரே ஒரு முள்ளங்கியே 5 கிலோ எடையில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

  MORE
  GALLERIES

 • 27

  ஒரு முள்ளங்கியின் எடை 5 கிலோ... ராட்சத முள்ளங்கியை பார்க்க விவசாயி வயலுக்கு படையெடுக்கும் மக்கள்!

  இந்த ராட்சத முள்ளங்கி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விவசாயி ஒருவர் வயலில்தான் விளைகிறது. பூசணிக்காய் அளவில் எடை கொண்ட இந்த ராட்ச முள்ளங்கியை நீங்கள் பார்த்திருப்பது மிக அரிது.

  MORE
  GALLERIES

 • 37

  ஒரு முள்ளங்கியின் எடை 5 கிலோ... ராட்சத முள்ளங்கியை பார்க்க விவசாயி வயலுக்கு படையெடுக்கும் மக்கள்!

  மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள விவசாயி ஞானதேவ், தனது இரண்டரை ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளார். சில நிலங்களில் முள்ளங்கியும் வளர்த்து வருகிறார். இங்கு தான் இந்த 5 கிலோ எடை கொண்ட ராட்ச முள்ளங்கியும் வளர்ந்து வருகிறது.

  MORE
  GALLERIES

 • 47

  ஒரு முள்ளங்கியின் எடை 5 கிலோ... ராட்சத முள்ளங்கியை பார்க்க விவசாயி வயலுக்கு படையெடுக்கும் மக்கள்!

  ஞானதேவ் வயலில் விளைந்த சுமார் 15 முள்ளங்கிகள் தலா 5 கிலோ எடை கொண்டவை. இவ்வளவு பெரிய முள்ளங்கியைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். பார்க்கப்போனால் சுரைக்காய்களை விட இந்த முள்ளங்கிகளின் அளவு பெரியது.

  MORE
  GALLERIES

 • 57

  ஒரு முள்ளங்கியின் எடை 5 கிலோ... ராட்சத முள்ளங்கியை பார்க்க விவசாயி வயலுக்கு படையெடுக்கும் மக்கள்!

  விவசாயி ஞானதேவ் மாட்டுச் சாணத்துடன் சூப்பர் பாஸ்பேட் உரத்தைப் பயன்படுத்தி முள்ளங்கி வளர்க்கிறார். அவ்வப்போது தேவைக்கு மட்டும் தண்ணீர் ஊற்றி முள்ளங்கி சாகுபடி செய்தார். இதனால்தான் முள்ளங்கி அதிகம் விளைந்துள்ளது என்கிறார் இந்த விவசாயி.

  MORE
  GALLERIES

 • 67

  ஒரு முள்ளங்கியின் எடை 5 கிலோ... ராட்சத முள்ளங்கியை பார்க்க விவசாயி வயலுக்கு படையெடுக்கும் மக்கள்!

  பொதுவாக கிராம் கணக்கில் எடையில் இருக்கும் ஒரு முள்ளங்கி, ஐந்து கிலோ இருப்பது இப்பகுதியில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த முள்ளங்கிகளை ஞானதேவ் அருகில் உள்ள ஓட்டல்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 77

  ஒரு முள்ளங்கியின் எடை 5 கிலோ... ராட்சத முள்ளங்கியை பார்க்க விவசாயி வயலுக்கு படையெடுக்கும் மக்கள்!

  இந்த பிரமாண்ட முள்ளங்கிகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சுற்றுப் பகுதியில் உள்ள விவசாயிகள் ஞானதேவ் பண்ணைக்கு தற்போது படையெடுத்து சென்று வருகின்றனர். எப்படி இவ்வளவு பெரிய முள்ளங்கி விளைகிறது என்று ஆச்சரியத்துடன் பார்த்து கேட்டு செல்கின்றனர்.

  MORE
  GALLERIES