திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் 3ஆவது சனிக்கிழமை என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று குவிந்துள்ளனர்.
2/ 6
தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளதால் சுவாமி தரிசனம் செய்வதற்கு 48 மணி நேரம் ஆகிறது.
3/ 6
நேற்று இரவே திருமலையில் பக்தர்கள் குவிந்துள்ளதால் சுமார் 8 கிமீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.
4/ 6
வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, பால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தேவஸ்தானம் ஏற்பாடு செய்து இலவசமாக வழங்கி வருகிறது.
5/ 6
திருப்பதி ஏழுமலையான் கோயிலை பொறுத்த வரை அதிகபட்சமாக வினாடிக்கு ஒன்றரை நபர் என்ற கணக்கில் ஒரு மணி நேரத்தில் சுமார் 4, 800 பக்தர்கள் மட்டுமே சாமி கும்பிட வசதிகள் உள்ளன.
6/ 6
நாளை ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, கூட்டத்தை சமாளிப்பதற்கான தயாரிப்பு பணிகளை தேவஸ்தானம் மும்முரமாக செய்து வருகிறது.