மேலும் போட்டின் உள்கட்டமைப்புகளில் ஏசி வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. கேரளா சுற்றுலா தளத்திற்கு மிகவும் பெயர்பெற்ற இடம். படகு வழியில் நீர் வழி சுற்றுலா செல்ல வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளிலும் இருந்தும் மக்கள் கூட்டம் அலை மோதும். தற்போது கொண்டுவந்துள்ள இந்த மெட்ரோ சேவை மூலம் வெகு விரைவில் மக்கள் எளிமையாக நீர்ப் பகுதிகளில் பயணம் செய்யலாம்.