கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயில், பக்தர்கள் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. வழிபாட்டுக்காக வருவோர் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்வதோடு, ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 35 பேரும் நாளொன்றுக்கு 665 பேர் மட்டுமே வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 8 முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி தீபாராதனையின் போதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.