திருவல்லா பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங். இவரது மனைவி லைலா. பகவல்சிங்கிற்கு அதிகமான கடன் மற்றும் பணப்பிரச்சினைகள் உள்ளன. பணப்பிரச்சினையில் இருந்து விடுபடவும், பணக்காரனாக மாறுவதற்கும் என்ன செய்ய வேண்டும் என போலி மந்திரவாதி முகமது ஷபியை சந்தித்து பகவல்சிங் பேசியிருக்கிறார். 2 பெண்களை நரபலி கொடுத்தால் நிறைய செல்வம் கிடைக்கும் என்று முகமது ஷபி கூற, அதற்கு பகவல்சிங்கும் சம்மதம் தெரிவித்துள்ளார். நரபலிக்கான பெண்களே நானே அழைத்து வருகிறேன், அதற்கான பணத்தை மட்டும் கொடுக்குமாறு முகமது ஷபி கூற, பகவல்சிங்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
லாட்டரி விற்பனையில் தனக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்த ரோஸ்லின், பத்மா ஆகியோரை பகவல்சிங்கின் வீட்டில் நடந்த பூஜைக்கு வரவழைத்துள்ளார் முகமது ஷபி. பூஜையில் கலந்து கொண்டால் பணம் கொடுப்பதாக முகமது ஷபி கூறியதால், இரு பெண்களும் பூஜையில் பங்கேற்க சம்மதித்து வந்துள்ளனர். இரவில் நடந்த பூஜையில் இரு பெண்களின் கழுத்தையும் அறுத்து கொலை செய்து நரபலி கொடுத்துள்ளனர்.
பின்னர் இருவரின் உடல்களையும் மருத்துவர் பகவல்சிங்கின் வீட்டின் அருகிலேயே உள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்துள்ளனர். நரபலி சம்பவம் குறித்து அறிந்த போலீசார் ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங், அவரது மனைவி லைலா, போலி மந்திரவாதி முகம்மது ஷபி ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் தற்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே முஹம்மது ஷாஃபி மீது கஞ்சா கடத்தல், பெண்களை விபச்சார தொழிலில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளது. மேலும், 75 வயது மூதாட்டி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கும் உள்ளன.
ரோஸ்லின், பத்மா ஆகிய இருவரையுமே வெவ்வேறு நாட்களில் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி முகமது ஷாஃபி, தம்பதி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு சினிமா ஷூட்டிங் நடைபெறுவதாக கூறி அவர்களை ஆடைகள் இல்லாமல் கட்டிலில் கட்டி வைத்து, சுத்தியால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளனர்.
பின்னர் 3 பேரும் சேர்ந்து இருவரின் சடலங்களையும் 60க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி சாப்பிட்டுள்ளனர். நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என கூறி முகமது ஷாஃபி இதை செய்ய வைத்துள்ளார். பின்னர் இரு பெண்களின் ரகசிய இடத்தில் கத்தியால் கீறி அந்த ரத்தத்தை வீடு முழுவதும் தெளித்துள்ளனர். இதனை தொடர்ந்து மீதமுள்ள துண்டுகளை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளனர்.