பொதுவாக கதகளி நடனம் என்பது இந்து புராண கதைகளை கூறுவதாகவே இருக்கும். ஆனால் இந்த அய்ரூர் கிராமத்தில் கிறிஸ்துவ மதத்தினருகாகவும் கதகளி நடனங்கள் அரங்கேற்றப்படுகிறது. பைபிளில் வரும் ஆபிரகாமின் தியாகம், ஊதாரி குமாரன், மக்தலேனா மரியாள் போன்ற கதைகள் இங்கு கதகளி நடனமாக அரங்கேற்றப்பட்டு கிறிஸ்துவ மக்களிடமும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
கிராம பஞ்சாயத்தின் தொடர் கோரிக்கையை ஏற்று 2018இல் மாநில அரசு பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கியது. தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சர்வே அலுவலகமும் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கி கிராமத்தின் அஞ்சல் அலுவக பெயரை மாற்றி தந்துள்ளன. இதன் மூலம் கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான 'அய்ரூர் கதகளி கிராமம்' என்ற பெயர் மாற்றம் நிறைவேறியுள்ளது.