கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சித்தராமையா, "தேர்தலுக்கு முன் மாநில மக்களுக்கு 5 முக்கிய உத்தரவாதங்களை அளித்துள்ளோம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, கட்சிக்கு முழு பெரும்பான்மை வழங்கியதால், முதல்வராக பதவியேற்றுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர், தமது அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே, ஐந்து உத்தரவாதங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதாக சத்தியப்பிரமாணம் செய்திருந்தேன். உறுதியளித்தபடி, முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே, எங்களின் அனைத்து உத்தரவாதங்களுக்கும் கொள்கையளவில் அங்கீகாரம் வழங்கி, சொன்னபடி செயற்பட்டுள்ளோம் என்றார்.
அரசு வெளியிட்ட உத்தரவில், மாநில சக்தி யோஜனா திட்டத்தின் கீழ், அனைத்து மாநில பெண்களுக்கும் கொள்கை ரீதியில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசின் நான்கு போக்குவரத்து கழகங்களின் சாதாரண பேருந்துகளில் இலவச பயண வசதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது கர்நாடக மாநில பெண்களுக்கு மட்டுமே இலவச திட்டம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.