நம் ஊரில் பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பிரெஞ்சு பிரைஸ் என்று எதனை வெளிநாட்டு துரித உணவுகள் வந்தபோதிலும், நம் நாட்டு பானிபூரியை அடித்துக்கொள்ள முடிவதில்லை. எந்த தெருவில் எந்த மூலையில் பானிபூரி கடை இருந்தாலும் அங்கு ஒரு மக்கள் இருந்துகொண்டே தான் இருக்கும். இது பார்த்தாலே வாயில் எச்சில் ஊற வைக்கும் உணவு.
ஜாம்நகரில் உள்ள ஒரு ஆயுர்வேத நிறுவனத்தில் படிக்கும் மருந்தியல் மாணவி, த்ரிஷா வகேலாவின் சிந்தனையில் உருவானது தான் ‘ஆயுர்வேத ஜல்பூரிகா’ என்கிற புதுவகை பானிப்பூரி. ராகி, கம்பு, ரவை, பாசிப்பருப்பு போன்ற தானியங்களை வைத்து இந்த பூரி தயாரிக்கப்படுகிறது.அது மட்டும் இல்லாமல் உடலுக்கு நம்மை பயக்கும் சில ஆயூர்வேத மூலிகைகளும் சேர்க்கப்படுகிறது.
ஆயுர்வேத சன்ஸ்தானால் ஜாம்நகரில் 60,000க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்ட மூன்று நாள் ஆரோக்கியம் மற்றும் தினை உணவுகள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சன்ஸ்தானின் மாணவர்கள், தினையின் பல சுவையான உணவுகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தினர். அதில் த்ரிஷா வகேலாவின் அவுர்வேதி ஜல்பூரிகாவை பலரும் சுவைத்து நல்ல பீட்பேக் கொடுத்துள்ளனர்.