இந்திய மக்களின் அன்பை வரவேற்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா தெரிவித்துள்ளார்.
2/ 7
இவாங்கா டிரம்ப் தாஜ்மகால் சென்ற போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது.
3/ 7
இந்நிலையில் இளைஞர்கள் பலர் இவாங்காவின் புகைப்படத்துடன், வரைகலை மூலம் தங்களது புகைப்படங்களை இணைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
4/ 7
இதுபோன்ற புகைப்படங்கள் வெளிடப்பட்ட ஒரு பதிவை இவாங்கா ரீடிவிட் செய்துள்ளார். அதில் இந்தியர்களின் அன்பை தான் வரவேற்று மகிழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
5/ 7
அதேபோல் பஞ்சாபி நடிகரும், பாடகருமான தில்ஜித், தனது ட்விட்டர் பக்கத்தில் இவாங்காவுடன் தாஜ்மகாலில் இருப்பது போன்ற படத்தை வெளியிட்டுள்ளார். அதில், அவர் என் வாழ்க்கையில் இவாங்கா வந்தவுடன் அவரை தாஜ்மகாலுக்கு அழைத்து சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.
6/ 7
இதற்கு இவாங்கா பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், மறக்கமுடியாத தருணம் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
7/ 7
இதுபோன்று போட்டோஷாப்பில் வடிவமைக்கப்பட்ட படங்கள் வைரலாகி வருகிறது.