மச்சிலி: உலகின் புகழ்பெற்ற புலிகளில் ஒன்றாக இந்தப் புலி கருதப்படுகிறது. வங்காள புலிகள் இனத்தைச் சேர்ந்த மச்சிலி, ரணதம்பூரின் ராணி என அழைக்கப்பட்டு வருகிறது. மச்சிலியின் சிறப்பசம் என்னவென்றால் ஒற்றைக் கண்ணால் சுமார் 19 ஆண்டுகளாக காட்டில் வாழ்ந்து வருகிறது. பல்வேறு தாக்குதல்கள், இடர்பாடுகளையும் கடந்து கம்பீரமாக பீடுநடைபோடுகிறது. குட்டிகளுக்கு வரும் ஆபத்தை தனி ஆளாக எதிர்கொள்ளும் மச்சிலி, 14 அடி முதலையையும் கொன்றுள்ளது. சண்டை செய்வதற்கு சளைத்ததல்ல மச்சிலி என்பதால், சுற்றுலாப் பயணிகள் காண விரும்பும் புலியாக உள்ளது.
பிரின்ஸ் : பந்திப்பூர் சரணாலயத்தின் இளவரசராக வலம் வந்த பிரின்ஸ், எதற்கும் அஞ்சாமல் கம்பீரமான நடை பயணம் மேற்கொள்ளும். அதனுடைய நடையை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும். ஆளுமையாக வலம் வந்த பிரின்ஸ் புலி கேமராக்களை கண்டு ஒருபோதும் வெட்கப்பட்டதில்லை. புகைப்படங்கள் எடுக்கும் வரை நிதானமான நின்று போஸ் கொடுக்கும். பிரின்ஸின் தந்தை பெயர் அக்ஸ்தியா. 14 ஆண்டுகள் வரை இருந்த இந்த புலி பந்திப்பூரில் இளவரசராக கோலோச்சி மறைந்தது.
முன்னா: மத்தியப் பிரதேசத்தின் கன்ஹா தேசியப் பூங்காவில் இருக்கும் முன்னா, ‘ராக்ஸ்டார்’ என அழைக்கப்படுகிளறார். இந்தப் புலியின் ஆதிக்கம் மற்றும் வேட்டையாடுவதில் இருக்கும் புத்திசாலித்தனம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. முன்னாவின் நெற்றியில் இருக்கும் கோடுகளைக் கொண்டு ராக்ஸ்டாரை உள்ளுர் மக்கள் அடையாளம் கண்டு கொள்கின்றனர். அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட புலிகளின் முன்னா முதன்மையானது என கருதப்படுகிறது. முன்னா உலகப் புகழ்பெற்றவராகவும் இருக்கிறார்.
மாயா: புலிகளின் அழகையும், மிருகதனத்தையும் ஒரே இடத்தில் பார்க்க வேண்டும் என்றால் மாயா - ஸ்கார்பேர்ஸ் என்ற இந்த இணையை ஒரே ஒருமுறை பார்த்தால் போதும். புலிகளின் அழகை மாயாவும், கம்பீரமான மிருகதனத்தை ஸ்கார்பேர்ஸூம் கொண்டிருக்கிறார்கள். 13 வயதான ஸ்கார்பேர்ஸின் முகத்தில் இருக்கும் வடு, அதனின் கோர முகத்தை பட்டவர்த்தனமாக வெளிக்காட்டும். புலி அல்லது காட்டெருமை ஒன்றுடன் ஏற்பட்ட பயங்கரமான மோதலில் அந்த வடு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. 250 கிலோ எடை கொண்ட ஸ்கார்பேர்ஸ், ‘ தி ஹல்க்’ ’வாக்டோ’ என்ற புனைப்பெயர்களுடன் அழைக்கப்படுகிறது.
கொலர்வாலி: பெஞ்ச் (Pench) தேசிய பூங்காவில் இருக்கும் கொலர்வாலி, பென்ஞ்சின் ராணி என அழைக்கப்படுகிறார். வனவிலங்குகள் தொடர்பான பல்வேறு ஆணவப் படங்களில் கொலர்வாலி இடம்பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 29 குட்டிகளை ஈன்று சாதனை படைத்துள்ளது. புகைப்படக்காரர்களுக்கான பெருமை என்று கூட இதனை அழைக்கின்றனர்.