கடந்த சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து, மத்திய அரசு அலுவலக வளாகம், பாஜக ஆளும் மாநில அரசு அலுவலக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டது.