பாராசூட் மூலம் குதிப்பதற்கு முன் அபிநந்தன் கடைசியாக அனுப்பிய ரேடியோ மெசேஜ்!
ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் விமானம் ஊடுருவிய நிலையில், அதனை இடைமறித்து தாக்கிய அபிநந்தன் பின்னர் பாராசூட் மூலமாக தப்பித்துள்ளார். அவர் கடைசியாக அனுப்பிய ரேடியோ செய்தி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பால்கோட் பகுதியில் புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தியது.
3/ 22
இந்த தாக்குதலில் மசூத் அசாரின் உறவினர் உள்ளிட்ட பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
4/ 22
பெரிய சேதம் இல்லை, மரங்கள் மீதே இந்தியா குண்டு வீசியுள்ளது என்று பாகிஸ்தான் கூறியது.
5/ 22
மசூத் அசார் நடத்தும் மதராசாக்கள் மீது குண்டு விழுந்துள்ளதாக அவரின் சகோதரர் பேசும் ஆடியோ சமீபத்தில் வெளியாகி இருந்தது.
6/ 22
பாகிஸ்தான் விமானப்படையின் விமானத்தை சுட்டு வீழ்த்தியபோது, தவறுதலாக இந்திய விமானி அபிநந்தன் அந்நாட்டு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார்.
7/ 22
முதலில் விமானி கைதை மறுத்த இந்தியா பின்னர் வீடியோக்கள் வெளியானதும் ஒப்புக்கொண்டது.
8/ 22
எனினும், இரண்டு நாட்களுக்குப் பிறகு விமானி அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.
9/ 22
கடந்த 1-ம் தேதி இரவு வாகா எல்லை வழியாக அவர் இந்தியாவுக்கு வந்தார்.
10/ 22
டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் நடத்தப்பட்டது.
11/ 22
அவர் உடலில் ரகசிய கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை என்று அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
12/ 22
வெகு விரைவில் தான் காக்பிட்-க்கு (விமானத்தில் உள்ள விமானியின் அறை) திரும்ப வேண்டும் என்று அபிநந்தன் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
13/ 22
போர் விமானத்தை இயக்குவதற்கு அவர் மேலும் சில மருத்துவ பரிசோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
14/ 22
ஒருவேளை அவர் அதில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவரால் போர் விமானத்தை இயக்க முடியாது.
15/ 22
இந்நிலையில், மிக் 21 ரக போர் விமானத்தில் சென்ற அபிநந்தன் கடைசியாக அனுப்பிய ரேடியோ மெசேஜ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
16/ 22
காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பாகிஸ்தானின் எப் 16 விமானத்தை அபிநந்தன் இடைமறித்துள்ளார்.
17/ 22
அப்போது வானில் நடந்த சண்டையில் ஆர் 73 என்ற ஏவுகணையை பயன்படுத்தி பாகிஸ்தானின் எப் 16 விமானத்தை அவர் சுட்டுவீழ்த்தியுள்ளார்.
18/ 22
“ஆர் 73 செலக்டெட்” என்ற வார்த்தைதான் அவர் கடைசியாக காக்பிட்டில் இருந்து அனுப்பிய ரேடியோ மெசேஜ்.
19/ 22
இதனை அடுத்து, எதிர்த்தாக்குதலில் மிக் 21 நிலைகுலையவே அவர் பாராசூட் மூலம் வெளியே குதித்துள்ளார்.
20/ 22
ஆனால், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் அவர் தரையிறங்கியுள்ளார்.
21/ 22
அங்குள்ள உள்ளூர்வாசிகள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
22/ 22
இதனை அடுத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் அவரை மீட்டுச்சென்றனர்.