முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » காதலிக்காக சண்டை.. நண்பனின் ஆணுறுப்பு, இதயத்தை வெட்டி எடுத்த கல்லூரி மாணவன்.. தெலங்கானாவை அதிர வைத்த சம்பவம்!

காதலிக்காக சண்டை.. நண்பனின் ஆணுறுப்பு, இதயத்தை வெட்டி எடுத்த கல்லூரி மாணவன்.. தெலங்கானாவை அதிர வைத்த சம்பவம்!

நவீனின் உடலை ஐதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் புதைத்துவிட்டு ஆந்திராவுக்கு ஹரிகிருஷ்ணா தப்பியோடி தலைமறைவானார்.

  • 16

    காதலிக்காக சண்டை.. நண்பனின் ஆணுறுப்பு, இதயத்தை வெட்டி எடுத்த கல்லூரி மாணவன்.. தெலங்கானாவை அதிர வைத்த சம்பவம்!

    தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அப்துல்பூர்மெட் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹர கிருஷ்ணா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பிடெக் இறுதியாண்டு படித்து வருகிறார். இதே வகுப்பில் 20 வயதான நவீன் என்பவரும் படித்துவந்தார். ஹரிஹர கிருஷ்ணாவும் நவீனும் பள்ளி காலத்திலேயே நண்பர்கள்.

    MORE
    GALLERIES

  • 26

    காதலிக்காக சண்டை.. நண்பனின் ஆணுறுப்பு, இதயத்தை வெட்டி எடுத்த கல்லூரி மாணவன்.. தெலங்கானாவை அதிர வைத்த சம்பவம்!

    11, 12ஆம் வகுப்புகளை ஒன்றாக படித்து, கல்லூரியிலும் ஒரே வகுப்பில் படித்து வந்த நிலையில், உடன் படிக்கும் மாணவி மீது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நவீன் அந்த பெண்ணிடம் காதலை சொல்ல இருவரும் இரண்டு ஆண்டுகள் காதல் உறவில் இருந்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் பிரேக் அப் ஆன நிலையில், ஹரிஹரி கிருஷ்ணா அந்த பெண்ணிடம் காதலை சொல்லி இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 36

    காதலிக்காக சண்டை.. நண்பனின் ஆணுறுப்பு, இதயத்தை வெட்டி எடுத்த கல்லூரி மாணவன்.. தெலங்கானாவை அதிர வைத்த சம்பவம்!

    இருப்பினும் நவீன் அந்த பெண்ணுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். தனது காதலியுடன் ஹரிஹர கிருஷ்ணா இருக்கும் போது அவருக்கு நவீன் இடம் இருந்து செல்போன் வாயிலாக தொடர்ந்து அழைப்பு வந்துள்ளது. இது ஹரிஹரி கிருஷ்ணாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலியுடன் முன்னாள் காதலன் தொடர்ந்து பேசி வருவதை பொறுக்க முடியாமல், நவீனை கொலை செய்ய ஹரிஹர கிருஷ்ணா திட்டம் தீட்டியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 46

    காதலிக்காக சண்டை.. நண்பனின் ஆணுறுப்பு, இதயத்தை வெட்டி எடுத்த கல்லூரி மாணவன்.. தெலங்கானாவை அதிர வைத்த சம்பவம்!

    அதன்பேரில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி பார்ட்டி இருப்பதாக கூறி அப்துல்லாபூர்மெட் பகுதியில் தனது வசிப்பிடத்திற்கு நவீனை ஹரிஹர கிருஷ்ணா வர வழைத்துள்ளார். அப்போது இது தொடர்பாக இருவருக்கும் இடையே நடந்து வாக்குவாதம் சண்டையாக மாறியதில் ஹரிஹர கிருஷ்ணா முன்னாள் காதலன் நவீனை கொலை செய்துள்ளார். அத்தோடு நிற்காமல் நவீனின் கை விரல், இதயம், அந்தரங்க உறுப்பு ஆகியவற்றை வெட்டி அதை புகைப்படம் எடுத்து காதலிக்கு அனுப்பியுள்ளார். முதலில் ஏதோ பிராங்க் செய்கிறார் என நினைத்த காதலி பின்னர் தான் உண்மையை உணர்ந்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 56

    காதலிக்காக சண்டை.. நண்பனின் ஆணுறுப்பு, இதயத்தை வெட்டி எடுத்த கல்லூரி மாணவன்.. தெலங்கானாவை அதிர வைத்த சம்பவம்!

    உயிரிழந்த நவீனின் உடலை ஐதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் புதைத்துவிட்டு ஆந்திராவுக்கு ஹரிகிருஷ்ணா தப்பியோடி தலைமறைவானார். தனது மகனின் செல்போன் ஸ்விட்ச் ஆப் இருக்கவே சந்தேகம் அடைந்த நவீனின் பெற்றோர் காவல்துறையில் புகார் தரவே இந்த அதிர்ச்சி சம்பம் அம்பலமானது.

    MORE
    GALLERIES

  • 66

    காதலிக்காக சண்டை.. நண்பனின் ஆணுறுப்பு, இதயத்தை வெட்டி எடுத்த கல்லூரி மாணவன்.. தெலங்கானாவை அதிர வைத்த சம்பவம்!

    தொடர்ந்து ஹரிஹர கிருஷ்ணாவை காவல்துறை கைது செய்து சிறையில் அடைந்து விசாரித்தனர். காதல் விவகாரத்திற்காகக்தான் இந்த கொலையை செய்ததாக ஹரிஹரி கிருஷ்ணா ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய நிலையில், இந்த கொலையில் வேறு எவரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என்றும் விசாரணை நடைபெறுகிறது.

    MORE
    GALLERIES