டெல்லியில் கடந்த சனிக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. நேற்று ஒருசில இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக டெல்லியின் பல சாலைகள், மழைநீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக, ITO , கஷ்மீரி கேட், டெல்லி - அரியானா எல்லை, குருகிராம் சாலைகள் தண்ணீரில் மிதக்கின்றன. சத்தியம் திரையரங்கு அருகில் உள்ள பாலம் முழுமையாக முழுகியுள்ளது. ஐடிஓ, இந்திர பிரஸ்தா பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.