

வீட்டு உதவிக்காக வந்த 15 வயது முறைப்பெண்ணை, கட்டிவைத்து 16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அரியானா மாநிலம் குர்கானில் நடந்துள்ளது.


அரியானா மாநிலம் குர்கான் பகுதியில் வசிக்கும் 15 வயது மாணவி நேற்று முன்தினம் பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து, அவரிடம் ஆசிரியர் உடல்நலம் சரியில்லையா? என்று விசாரிக்க, தனக்கு உறவினர் வீட்டில் நடந்த கொடுமையை கூறியுள்ளார்.


இதனை அடுத்து, ஆசிரியர் மாணவியின் தாயை அழைத்து கூற, தாய் நேராக சென்று தனது உறவுக்கார சிறுவன் மீது போலீசில் புகாரளித்துள்ளார். நடந்த சம்பவம் தொடர்பாக குர்கான் போலீசார் கூறுகையில், மாணவியின் தாய், தனது நாத்தனாருக்கு உடல்நிலை சரியில்லாததால், மகளை உதவிக்காக அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.


நாத்தனார் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அவரது 16 வயது மகன், மாணவியை கட்டிலில் கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனால், மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்ட பெண், பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார். மேலும், ஆசிரியரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார்.