முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » குஜராத்தில் தானாக நகரும் அதிசய மாமரம்..! - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்! - உண்மை என்ன?

குஜராத்தில் தானாக நகரும் அதிசய மாமரம்..! - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்! - உண்மை என்ன?

தெற்கு குஜராத்தின் புல்சார் மாவட்டத்தில் உள்ள சஞ்சன் பண்டரில் உள்ள கிராம மக்கள், இங்குள்ள மாமரமானது மறைந்த வாலி அகமது அச்சுவின் விவசாய நிலத்தில் பல நூற்றாண்டுகளாக உள்ளது என தெரிவிக்கின்றனர். இந்த மரம் அதன் நிலையான இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் நகர்ந்துள்ளதாக கூறுகின்றனர்.

 • 17

  குஜராத்தில் தானாக நகரும் அதிசய மாமரம்..! - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்! - உண்மை என்ன?

  பொதுவாக நூற்றாண்டுகள் கடந்த மரங்கள் என்றாலே நிச்சயம் அது பிரசிதிப்பெற்றதாக இருக்கும். ஆனால் இங்கு சற்று வித்தியாசமானது வயது மட்டுமில்லை. மரம் ஒன்று நகர்ந்துக் கொண்டே செல்வதால் கிராமத்தின் பெருமையாக ஒரு மாமரம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் குஜராத்தின் புல்சார் மாவட்டத்தில் உள்ள சஞ்சன் பண்டர் என்ற கிராமத்தில் தான் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னதாக மட்டுமின்றி நகரும் மாமரம் ஒன்று உள்ளது என்கின்றனர் கிராம வாசிகள்.. என்ன சொல்கிறார்கள்? இம்மரத்தைப் பற்றி என்பது பற்றிய சுவாரஸ்சிய தகவல்கள் இங்கே..

  MORE
  GALLERIES

 • 27

  குஜராத்தில் தானாக நகரும் அதிசய மாமரம்..! - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்! - உண்மை என்ன?

  குஜராத்தில் நடமாடும் மாமரம்…தெற்கு குஜராத்தின் புல்சார் மாவட்டத்தில் உள்ள சஞ்சன் பண்டரில் உள்ள கிராம மக்கள், இங்குள்ள மாமரமானது மறைந்த வாலி அகமது அச்சுவின் விவசாய நிலத்தில் பல நூற்றாண்டுகளாக உள்ளது என தெரிவிக்கின்றனர். இந்த மரம் அதன் நிலையான இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் நகர்ந்துள்ளதாக கூறுகின்றனர். இது தங்களுக்கு வியப்பாக உள்ளது எனவும் பராம்பரியமிக்க இந்த மாமரம் கிழக்கு நோக்கி நகர்வதாகவும் உள்ளூர் பார்வையாளர்கள் கூறுகின்றனர். மேலும் இக்கிராமத்திற்கு உள்ள பழங்குடியினர் உள்பட உள்ளூர்வாசிகள் மாமரத்தை புனிதமாக கருதுவதால் அவற்றிற்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி பாதுகாத்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 37

  குஜராத்தில் தானாக நகரும் அதிசய மாமரம்..! - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்! - உண்மை என்ன?

  இதுக்குறித்து வாலியின் 30 வயது மகன் அல்தாப் கூறுகையில், "நடமாடும்" மாமரம் உள்ள விவசாய நிலத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாத்தா அகமது அச்சு வாங்கினார் எனவும், இந்த மரம் இரண்டு தலைமுறைகளுக்கு இடையில் சுமார் 20 மீட்டர் தூரம் நகர்ந்துள்ளதாக இவரது பெற்றோர்கள் கூறியதாக தெரிவிக்கிறார். மரத்தின் பாகங்கள் மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதாகவும் அல்தாஃப் கூறுகிறார்.

  MORE
  GALLERIES

 • 47

  குஜராத்தில் தானாக நகரும் அதிசய மாமரம்..! - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்! - உண்மை என்ன?

  90 வயது பழங்குடியினரான திவால் காக்கா நடமாடும் மாமரம் குறித்து பேசுகையில், மாமரம் நிதானமான நடப்பதாக தெரிவிக்கிறார். "கடந்த 250 ஆண்டுகளில் இது சுமார் 200 மீட்டர் நகர்ந்திருக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு 20 முதல் 25 ஆண்டுகளுக்கும் மூன்று முதல் நான்கு மீட்டர்கள்"நகர்கிறது என கூறுகின்றனர்.மரத்திலிருந்து வரும் மாம்பழங்கள் ஒப்பீட்டளவில் சிறியதாக இருக்கும் மற்றும் பழுத்தவுடன் எரியும் சிவப்பு நிறமாக மாறும் கூறுகிறார்.

  MORE
  GALLERIES

 • 57

  குஜராத்தில் தானாக நகரும் அதிசய மாமரம்..! - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்! - உண்மை என்ன?

  இதுக்குறித்து கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் தெரிவிக்கையில், குஜராத்தில் உள்ள 50 பாரம்பரிய மரங்களின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மா மரமானது(Mangifera Indica) வேறு எங்கும் காணப்படாத பல தனித்துவத்துமான அம்சங்களைக் கொண்டுள்ளது என்கிறார். மேலும் இந்த மரத்தின் கிளைகள் பிரதான தண்டிலிருந்து நிலத்திற்கு இணையாக வளரும். இவ்வாறு தரையைத் தொடும் கிளையின் ஒரு பகுதியிலிருந்து வேர்கள் உருவாவதோடு அது தண்டு வடிவத்தில் மாறிவிடுகிறது.

  MORE
  GALLERIES

 • 67

  குஜராத்தில் தானாக நகரும் அதிசய மாமரம்..! - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்! - உண்மை என்ன?

  இதையடுத்து ஏற்கனவே உள்ள தண்டு பகுதி காய்ந்துவிடும். இந்த மரத்தில் இத்தகைய செயல்கள் மாறி மாறி நடைபெற்றுவருதால் தான் மரம் நகர்வதாக கூறப்படுகிறது என்கிறார் வனப்பாதுகாவலர். மேலும், மரம் பல ஆய்வுகளுக்கு உட்பட்டது. ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் அமைந்தது என்கின்றார் தலைமை வனப்பாதுகாவலர். மேலும் வன அதிகாரிகளால் சேகரிக்கப்பட்ட தரவு மற்றும் கிராமவாசிகளின் தலைமுறைகள் மூலம் வழங்கப்பட்ட தகவல்கள், சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பகால பார்சி குடியேறியவர்களால் மாமரம் நடப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.

  MORE
  GALLERIES

 • 77

  குஜராத்தில் தானாக நகரும் அதிசய மாமரம்..! - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்! - உண்மை என்ன?

  இருப்பினும், வயது இன்னும் சரியாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் 936 இல் குஜராத்தில் தஞ்சம் கோரிய ஜோராஸ்ட்ரிய அகதிகளால் சஞ்சன் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. அவர்கள் பூர்வீக நகரமான கிரேட்டர் கொராசனில் உள்ள சஞ்சனின் பெயரைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த சஞ்சன் நகரம் முன்னாள் போர்த்துகீசிய காலனியான டாமன் யூனியன் பிரதேசத்திற்கு அருகில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES