முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » தோண்டத் தோண்ட தங்கம்... பிர்பூம் ஆற்றங்கரையில் குவிந்த கிராம மக்கள்!

தோண்டத் தோண்ட தங்கம்... பிர்பூம் ஆற்றங்கரையில் குவிந்த கிராம மக்கள்!

மக்கள் தோண்டியதில் நதியின் கரையில் சிறிய அளவிலான பழைய நாணயங்கள் கிடைத்துள்ளன.

 • 16

  தோண்டத் தோண்ட தங்கம்... பிர்பூம் ஆற்றங்கரையில் குவிந்த கிராம மக்கள்!

  ஒரு காலத்தில் இந்திய அரசர்கள் எல்லாம் தங்க நாணயங்களை தான் தங்கள் நாட்டின் காசாக பயன்படுத்தினார்கள் என்று வரலாற்றில் படிக்கும் போது அந்த காலத்தில் நாம் வாழவில்லையே என்று பலரும் ஏங்கியிருப்போம். இந்த காலத்தில் ஒரு கிராம் தங்கம் வாங்கவே நாக்கு தள்ளுகிறது. ஆற்றில் தங்கம் வருகிறது என்று சொன்னால் யார்தான் அமைதியாக இருப்பார்கள்

  MORE
  GALLERIES

 • 26

  தோண்டத் தோண்ட தங்கம்... பிர்பூம் ஆற்றங்கரையில் குவிந்த கிராம மக்கள்!

  அப்படி தான் மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் பகுதியில் உள்ள முராருய் 1வது பிளாக்கின், பார்கண்டியின் ஒடிசா-வங்காள-ஜார்கண்ட் எல்லையில் ஓடும் நதியான பான்ஸ்லோய் ஆற்றங்கரையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் தங்க ஆபரணங்களை முதன்முதலில் பார்த்து எடுத்துள்ளார். மேலும் சில இடங்களை தேடும் போது அங்கும் தங்க நகைகள் கிடைத்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 36

  தோண்டத் தோண்ட தங்கம்... பிர்பூம் ஆற்றங்கரையில் குவிந்த கிராம மக்கள்!

  நதிக்கரையில் தங்கம் கிடைக்கும் செய்தி காட்டுத்தீ போல முழு கிராமத்திற்கும் பரவ பார்கண்டி கிராம மக்கள் ஆற்றின் கரையில் குவிந்தனர். தங்கத்தைத் தேடி, சிலர் தங்கள் கைகளாலும், சிலர் மண்வெட்டிகளாலும் ஆற்றின் கரையைத் தோண்ட ஆரம்பித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 46

  தோண்டத் தோண்ட தங்கம்... பிர்பூம் ஆற்றங்கரையில் குவிந்த கிராம மக்கள்!

  பல ஆண்டுகளாக பார்கண்டி கிராமத்தில் பான்ஸ்லோய் ஆறு பாய்கிறது. வருடத்தின் பெரும்பகுதி இந்த ஆற்றில் தண்ணீர் இருப்பதில்லை. இருப்பினும், இந்த நதி பருவமழையின் போது பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் அந்த நதியில் தங்கம் எந்திருந்து வந்து என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 56

  தோண்டத் தோண்ட தங்கம்... பிர்பூம் ஆற்றங்கரையில் குவிந்த கிராம மக்கள்!

  மக்கள் தோண்டியதில் நதியின் கரையில் சிறிய அளவிலான பழைய நாணயங்களை போல் தோற்றம் அளிக்கும் பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் அதில் சில பழங்கால எழுத்துக்கள், அடையாளங்கள் உள்ளன. வரலாற்றில் அந்த பகுதிக்கு அருகில் 'மகேஷ்பூர் ராஜ்பரி' என்ற நகரம் இருந்து சுபர்ணரேகா நதியில் மூழ்கியதாக நம்பப்படுகிறது. புதைந்த தங்கம் சுபர்ணரேகா நதி வழியாக பான்ஸ்லோய் நதிக்கு வந்திருக்கலாம் என்ற யுகம் எழுந்து வருகிறது.

  MORE
  GALLERIES

 • 66

  தோண்டத் தோண்ட தங்கம்... பிர்பூம் ஆற்றங்கரையில் குவிந்த கிராம மக்கள்!

  ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயம் முராரி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திஅறிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, முராரையில் உள்ள பிளாக் 1 இன் BDO ஜாக்ரத் சவுத்ரி இந்த இடத்தை மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆற்றின் குறுக்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த இடத்தை தொல்லியியல் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

  MORE
  GALLERIES