முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » ரெம்டெசிவர் மருந்தின் பயன்பாடு என்ன..? எவ்வாறு செயல்படுகிறது..? தெரிந்துகொள்ளுங்கள்

ரெம்டெசிவர் மருந்தின் பயன்பாடு என்ன..? எவ்வாறு செயல்படுகிறது..? தெரிந்துகொள்ளுங்கள்

ரெம்டெசிவர் மருந்தை குறிப்பிட்ட நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த மருந்து இரண்டு விதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தவல்லது.

  • 19

    ரெம்டெசிவர் மருந்தின் பயன்பாடு என்ன..? எவ்வாறு செயல்படுகிறது..? தெரிந்துகொள்ளுங்கள்

    ரெம்டெசிவிர் மருந்து ஒரு ஆன்டிவைரஸ் மருந்தாகும். எபோலோ வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட இந்த மருந்து, தற்போது கொரோனா வைரஸ் சிகிச்சைக்கும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சைப் பெற்று வருபர்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்தும்போது, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 29

    ரெம்டெசிவர் மருந்தின் பயன்பாடு என்ன..? எவ்வாறு செயல்படுகிறது..? தெரிந்துகொள்ளுங்கள்

    இதனால், மருத்துவ சந்தையில் இந்த மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் இந்த மருந்தை வாங்குவதற்காக கடந்த சில நாட்களாக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு ரெம்டிசிவியர் மருந்துகளை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 39

    ரெம்டெசிவர் மருந்தின் பயன்பாடு என்ன..? எவ்வாறு செயல்படுகிறது..? தெரிந்துகொள்ளுங்கள்

    ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவை முற்றிலுமாக குணப்படுத்தும் சர்வயோக நிவாரணி அல்ல என்று விளக்கியுள்ள அவர், குறிப்பிட்ட நோயாளிகளுக்கு மட்டுமே அந்த மருந்தை பயன்படுத்த வேண்டும் என விளக்கம் அளித்துள்ளார். தவறான புரிதலால் அனைத்து மருத்துவமனைகளும் ரெம்டெசிவிரை பரிந்துரை செய்வதால், அந்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 49

    ரெம்டெசிவர் மருந்தின் பயன்பாடு என்ன..? எவ்வாறு செயல்படுகிறது..? தெரிந்துகொள்ளுங்கள்

    ரெம்டெசிவிர் மருந்தைப் பொறுத்தவரையில் சார்ஸ் (SARS ) மற்றும் மெர்ஸ் (MERS) வைரஸ்களுக்கு எதிராக போராட வல்லது. இந்த இரண்டு வைரஸ்களும் கொரோனா வைரஸை ஏற்படுத்தி வரும் SARS-CoV-2 வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதால், ரெம்டெசிவிர் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ரெம்டிசிவியர் மருந்தை அமெரிக்காவைச் சேர்ந்த கிளீயட் சயின்ஸ் நிறுவனம் கண்டுபிடித்து எபோலோ வைரஸூக்கு எதிராக பயன்படுத்தியது.

    MORE
    GALLERIES

  • 59

    ரெம்டெசிவர் மருந்தின் பயன்பாடு என்ன..? எவ்வாறு செயல்படுகிறது..? தெரிந்துகொள்ளுங்கள்

    இந்த நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளில் சார்ஸ் வைரஸ்களை கட்டுப்படுத்துவதில் நல்ல முடிவுகளையும் கொடுத்தது. அதாவது, இந்த மருந்தை உடலுக்குள் செலுத்தும்போது, சார்ஸ் வைரஸ்கள், அரோக்கியமான செல்களுடன் இணைந்து இரட்டிப்பாவதை தடுக்கிறது. இதனால், வைரஸ் பரவல் சீரான இடைவெளியில் குறைந்து, பாதிப்பில் இருந்து மீளச் செய்கிறது.

    MORE
    GALLERIES

  • 69

    ரெம்டெசிவர் மருந்தின் பயன்பாடு என்ன..? எவ்வாறு செயல்படுகிறது..? தெரிந்துகொள்ளுங்கள்

    இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு எமர்ஜென்சியில் இருப்பவர்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம் என அனுமதி வழங்கியது. இந்த அனுமதி தற்காலிகமானது என்றும், நோயாளிகளை ஆபத்து கட்டத்தில் இருந்து மீட்டு கொண்டுவருவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெளிவுபடுத்தியது. பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து 5 முதல் 10 நாட்களுக்கு ரெம்டிசிவியரை பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ள எப்.டி.ஏ இந்த தடுப்பு மருந்து தற்போது வரை ஆய்வில் மட்டுமே இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 79

    ரெம்டெசிவர் மருந்தின் பயன்பாடு என்ன..? எவ்வாறு செயல்படுகிறது..? தெரிந்துகொள்ளுங்கள்

    ரெம்டெசிவிர் மருந்தை இந்தியா உள்ளிட்ட 127 நாடுகள் பயன்படுத்திக்கொள்ள கிளீயட் சயின்ஸ் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் 4 நிறுவனங்களுக்கு இந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. முறையான தடுப்பூசி மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கும் வரை மட்டுமே ரெம்டெசிவிர் மருந்தை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்ற கட்டுப்பாட்டையும் கிளீயர் சயின்ஸ் நிறுவனம் விதித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 89

    ரெம்டெசிவர் மருந்தின் பயன்பாடு என்ன..? எவ்வாறு செயல்படுகிறது..? தெரிந்துகொள்ளுங்கள்

    ரெமிடிசிவியர் என்ன செய்கிறது : ரெம்டெசிவிர் என்பது நியூக்ளோசைட் அனலாக். வைரஸ் ஒருமுறை உடலுக்கு நுழைந்தவுடன் ஆரோக்கியமான செல்களுடன் இணைந்து இரண்டு, மூன்றாக பெருக தொடங்குகிறது. ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து செலுத்தப்படும்போது, இந்த மருந்து உடலுக்குள் இருக்கும் வைரஸ் செல்களைப்போல் உருமாற்றிக்கொண்டு, அந்த செல்கள் மீண்டும் பெருகுவதை தடைசெய்கிறது. வைரஸ் பெருகுவது தடையாகும்போது, பாதிப்பு குறையத் தொடங்கும்.

    MORE
    GALLERIES

  • 99

    ரெம்டெசிவர் மருந்தின் பயன்பாடு என்ன..? எவ்வாறு செயல்படுகிறது..? தெரிந்துகொள்ளுங்கள்

    ரெம்டெசிவிர் பக்கவிளைவு : ரெமிடிசிவியர் மருந்தை குறிப்பிட்ட நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த மருந்து இரண்டு விதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தவல்லது. அதாவது, கல்லீரலில் என்சைம் பெருக்கத்தில் மாற்றத்தை உண்டாக்கும். இதனால், ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்தியவர்கள் தங்களின் கல்லீரலை பல்வேறு ரத்தசோதனைகள் மூலம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மற்றொன்று ஒவ்வாமை காரணமாக வாந்தி, படபடப்பு, வியர்வை மற்றும் குறைவான ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

    MORE
    GALLERIES