அசாமில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால் 16 மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அசாமின் 16 மாவட்டங்களில் 704 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அசாம் வெள்ளத்தால் சுமார் 2.53 லட்சம் பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. அசாமில் உள்ள வனவிலங்கு பூங்காவில் வெள்ளநீர் புகுந்ததால் விலங்குகள் வேறு இடத்திற்கு புலம்பெயர்கின்றன. காண்டாமிருங்கள் வெள்ளநீரிலிருந்து மீண்டு பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. அசாம் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளநீர் அபாய அளவை தாண்டி பெருக்கெடுத்துள்ளது. அசாம் வெள்ளம்