முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்

FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்

  • 113

    FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்

    போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவுசெய்திருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசின் நிபந்தனை பேச்சுவார்த்தையை மீண்டும் நிராகரித்த விவசாயிகள் 5- வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 213

    FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்

    விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 313

    FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்

    இந்நிலையில் வழக்கறிஞர் பூல்கா தலைமையில் உச்ச நீதிமன்றத்தின் முன் திரண்ட வழக்கறிஞர்கள், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு அரசியல் சாயம் பூசுவது தவறு என்றும், அவர்களது கோரிக்கை ஏற்கக் கூடியதே எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

    MORE
    GALLERIES

  • 413

    FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்

    அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச்சட்டம், விவசாய விளைபொருள்கள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதார விலை முறைக்கு பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 513

    FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்

    இதனால், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யக் கோரியும், டெல்லி சலோ என்ற பெயரில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டிராக்டரில் டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 613

    FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்

    அவர்களை டெல்லிக்குள் அனுமதிக்க முதலில் மறுப்பு தெரிவித்த காவல்துறை, கண்ணீர்புகை குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் விரட்டியடித்தது.

    MORE
    GALLERIES

  • 713

    FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்

    ஆனாலும், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிடாததால், புராரியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே அந்த மைதானத்திற்குச் சென்றனர்.

    MORE
    GALLERIES

  • 813

    FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்

    இதனிடையே, விவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாகவும், வேளாண் துறை அமைச்சர் டிசம்பர் மூன்றாம் தேதி விவசாய சங்க பிரதிநிதிகளைச் சந்தித்து பேச இருப்பதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்

    MORE
    GALLERIES

  • 913

    FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்

    மேலும், நெடுஞ்சாலைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள், நிரங்காரி மைதானத்திற்கு செல்ல வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

    MORE
    GALLERIES

  • 1013

    FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்

    ஆனால், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்காமல், நிரங்காரி மைதானத்தில் அனுமதி வழங்கப்பட்டதால், அதிருப்தி அடைந்துள்ள விவசாயிகள், அமித்ஷாவின் வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 1113

    FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்

    மேலும், டெல்லியின் பிற மாநில எல்லைகளான திக்ரி, சிங்கு, காசிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 1213

    FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்

    இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் போலீசாரின் தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் நிலையில், காயம் அடைந்த விவசாயி ஒருவரின் ஒற்றை புகைப்படம் இணையவாசிகள் மனதை உலுக்கும் விதமாக அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 1313

    FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்

    பலரும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES