குடியரசு தினவிழாவுக்கு இடையூறு ஏற்படாமல் பேரணி நடத்துவதற்கு விவசாயிகள் ஒப்புக்கொண்டதையடுத்து, பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதனால், இன்று காலை முதலே விவசாயிகள் போராட்டக்களத்திலிருந்து டெல்லிக்குள் டிராக்டர் மூலம் நுழையத் தொடங்கிவிட்டனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைகளில் தேசியக் கொடிகளை ஏந்திக்கொண்டு வருகின்றனர்.