முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » இது புதுசா இருக்கே.. ஏடிஎம் மூலம் பால் விற்பனை... மேனேஜர் வேலையை உதறிவிட்டு புது ஐடியா மூலம் சாதித்த நபர்..!

இது புதுசா இருக்கே.. ஏடிஎம் மூலம் பால் விற்பனை... மேனேஜர் வேலையை உதறிவிட்டு புது ஐடியா மூலம் சாதித்த நபர்..!

பீகாரில் ஒருவர் தனது காப்பீட்டு நிறுவன மேலாளர் வேலையை விட்டுவிட்டு ஏடிஎம் மூலம் பால் விற்பனை செய்து அசத்தி வருகிறார்.

  • 15

    இது புதுசா இருக்கே.. ஏடிஎம் மூலம் பால் விற்பனை... மேனேஜர் வேலையை உதறிவிட்டு புது ஐடியா மூலம் சாதித்த நபர்..!

    இதுவரை நாம் ஏடிஎம்களில் பணம் வந்து தான் கேள்வி பட்டிருப்போம். ஆனால், இங்கு வேளாண் தொழில் முனைவர் ஒருவர் ஏடிஎம் மூலம் பால் வரவைத்து மக்களுக்கு வழங்கி அசத்தி வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 25

    இது புதுசா இருக்கே.. ஏடிஎம் மூலம் பால் விற்பனை... மேனேஜர் வேலையை உதறிவிட்டு புது ஐடியா மூலம் சாதித்த நபர்..!

    பீகார் மாநிலம் பகல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வினய் குமார். இவர் ஆரம்பத்தில் சிறிய கடையில் ஏடிஎம் மூலம் பால் வழங்கும் தொழிலை தொடங்கினார். அதற்கு, சிறப்பான வரவேற்பு கிடைக்கவே தற்போது மொபைல் பால் ஏ.டி.எம். மூலம் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்து அசத்தி வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 35

    இது புதுசா இருக்கே.. ஏடிஎம் மூலம் பால் விற்பனை... மேனேஜர் வேலையை உதறிவிட்டு புது ஐடியா மூலம் சாதித்த நபர்..!

    ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக இருந்த இவர் வேலையை விட்டு வெளியேறி ஸ்டார்ட் அப் தொழில் செய்ய வேண்டும் என முடிவெடுத்தார். இதற்காக 1 வருட காலம் யோசித்து ஆய்வு செய்தார். மொபைல் பால் ஏடிஎம் தொடங்க வேண்டும் என்று ஆர்வம் வரவே அங்குள்ள வேளாண் கல்லூரியில் பயிற்சி எடுத்து பால் ஏடிஎம் தொடங்கினார்.

    MORE
    GALLERIES

  • 45

    இது புதுசா இருக்கே.. ஏடிஎம் மூலம் பால் விற்பனை... மேனேஜர் வேலையை உதறிவிட்டு புது ஐடியா மூலம் சாதித்த நபர்..!

    உள்ளூர் கால்நடை விவசாயிகளுடன் நல்ல தொடர்பை வைத்துக்கொண்டு எப்போதும் பால் கிடைக்கும் வகையில் தொழிலை சிறப்பாக செய்து வருகிறார். 4 டிகிரி சென்டிகிரேட் குளிரில் இவர் கொள்முதல் செய்யும் பாலை பதப்படுத்தி வைக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 55

    இது புதுசா இருக்கே.. ஏடிஎம் மூலம் பால் விற்பனை... மேனேஜர் வேலையை உதறிவிட்டு புது ஐடியா மூலம் சாதித்த நபர்..!

    இவரது ஏடிஎம் கடையில் ஒரு லிட்டர் பால் ரூ.48க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெலிவரி செய்யப்படும் பால் லிட்டருக்கு ரூ.52க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாள்தோறும் முதலில் வரும் 100 வாடிக்கையாளர்களுக்கு சற்றே குறைந்த விலையில் பால் விற்பனை செய்கிறார்.

    MORE
    GALLERIES