இதனைச் செய்ய அதிகாரம் வேண்டும்... மத்திய அரசிடம் கேட்கும் தேர்தல் ஆணையம்...!
News18 Tamil | August 19, 2019, 9:19 AM IST
1/ 4
வாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் என மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.
2/ 4
மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக விண்ணப்பிப்பவர்களிடமும், ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களிடமும் ஆதார் எண்களை கேட்டுப்பெறுவதற்கு சட்டப்பூர்வ அனுமதி வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3/ 4
இதற்கு ஏற்ற வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைப்பதற்கு தடையாக அமைந்து விட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது.
4/ 4
இதனால், வாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப் பெறுகிற வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.