சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. டெல்லி,மும்பை, கொல்கத்தா, பெங்களூரு நகரங்களுக்கு அதிகளவில் பயணிகள் செல்கின்றனர் இந்த நிலையில் சென்னையில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருவதால், விமானப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த வாரம் 100 விமானங்கள் சென்னையில் இருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 126 விமானங்கள் இயக்கப்படுகின்றன.