ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் இணைந்த கனிமொழி.. காங்கிரசிற்கு வலுசேர்க்கும் திமுக..?
இன்று அரியானா மாநிலம், சோனா அருகே கெர்லி லாலா பகுதியில் இன்று காலை ராகுல் காந்தி நடைபயணத்தை தொடர்ந்தார். இதில், காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஹரியானா மாநிலத்தில் எம்.பி., ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் ஒற்றுமை நடைபயணத்தில், எம்பி கனிமொழி பங்கேற்றார்.
2/ 6
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்கள் மத்தியில் ஆதரவை திரட்டும் வகையில் குமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார்.
3/ 6
இந்த பயணத்தை கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார். மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
4/ 6
இந்நிலையில் இன்று ஹரியானா மாநிலம், சோனா அருகே கெர்லி லாலா பகுதியில் இன்று காலை ராகுல் காந்தி நடைபயணத்தை தொடர்ந்தார். இதில், காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
5/ 6
இந்நிலையில், தவுஜ் பகுதிக்கு வந்த திமுக எம்.பி., கனிமொழி, நடைபயணத்தில் பங்கேற்று ராகுல் காந்தியுடன் நடந்து சென்றார்.
6/ 6
ராகுல்காந்தியின் இந்த இந்திய ஒற்றுமை பயணத்தின் நூறாவது நாள் நிகழ்வானது,டிசம்பர் 16 அன்று கொண்டாடப்பட்டது குறிப்பிடப்பட்டது.