அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் என்று எல்லா இடமும் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் செர்ரி மலர்கள் பூத்து ஊரை அலங்கரிக்கும். இந்த காலத்தை செர்ரி ப்லோஸ்ஸோம் காலம் என்று குறிப்பிடுவார்கள். ஜப்பானில் இது சாக்குறா என்ற திருவிழாவாக கொடாடப்படுகிறது. இந்தியாவில் காஷ்மீர் பகுதிகளில் கூட இதை பார்க்கலாம்.
நம் ஊரில் காகிதப்பூ என்று சொல்லும் செடியின் பெயர்தான் போகன்வில்லா(Bougainvillea). சிவப்பு, ரோஸ், ஆரஞ்சு, வெள்ளை, ஊதா என்று பலநிறங்களில் காணப்படும் இந்த மலர்கள் பிப்ரவரி , மார்ச், ஏப்ரல் மாதங்களில் பூத்து குலுங்கும். தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இது மலட்டுத்தன்மை கொண்டதாக இருந்தாலும், பூக்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
கொத்துக் கொத்தாக பூத்து குலுங்கும் இந்த மலர்கள் சாலையில் விழுந்து கனவு உலக காட்சி போல மாற்றும் தன்மை கொண்டது. டெல்லியில் இப்போது அதிகப்படியான போகன்வில்லா மரங்கள் நினைவு சின்னங்கள் அருகில் இருப்பதால் இப்போது பூத்து குலுங்கும் மலர்களோடு நினைவு சின்னங்களின் படங்களை எடுத்து போஸ்ட் செய்து அசத்தி வருகின்றனர்.