முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் டெங்கு - முன் தடுப்பு நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் டெங்கு - முன் தடுப்பு நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் தண்ணீர் பயன்பாடு அதிகமுள்ளது. அங்கு தண்ணீர் தேங்கி நிற்கும் பட்சத்தில் அதில் இருந்து டெங்குவை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

 • 16

  நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் டெங்கு - முன் தடுப்பு நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

  மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோய்களில் டெங்குவும் ஒன்றாகும். இந்த டெங்குவை ஒழிக்க அவ்வபோது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் சீசன் தவறாமல் மீண்டும், மீண்டும் வந்து விடுகிறது. தற்போது டெல்லியில் டெங்கு காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் பரவிவரும் டெங்கு காய்ச்சல் அடுத்தடுத்த நாட்களில் எங்கெல்லாம் பரவும் என்பதை கணிக்க முடியாது. நாம் வாழும் பகுதிகளிலும் வரலாம் அல்லது வராமல் கூட போகலாம். ஆனால், டெங்கு நோயில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்கான முன் தடுப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வது அவசியம்.

  MORE
  GALLERIES

 • 26

  நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் டெங்கு - முன் தடுப்பு நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

  பொது இடங்களில் உருவாகும் டெங்கு கொசுக்கள் :பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் தண்ணீர் பயன்பாடு அதிகமுள்ளது. அங்கு தண்ணீர் தேங்கி நிற்கும் பட்சத்தில் அதில் இருந்து டெங்குவை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. உதாரணத்திற்கு டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் தான் டெங்கு  கொசு உற்பத்தியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

  MORE
  GALLERIES

 • 36

  நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் டெங்கு - முன் தடுப்பு நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

  கொசுவிடம் இருந்து பாதுகாப்பு :வீட்டில் கொசுக்களை விரட்டியடிக்கும் நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டாலும், வெளியிடங்களுக்கு செல்லும்போது அதன் கடியில் இருந்து தப்புவது கடினம். ஆகவே, எப்போதும் கொசுக்களை விரட்டியடிக்கும் க்ரீம் அல்லது லோஷன்களை உடலில் அப்ளை செய்து கொள்ளவும். குறிப்பாக, குழந்தைகளுக்கு இதை தவறாமல் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 46

  நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் டெங்கு - முன் தடுப்பு நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

  பாதுகாப்பான உடைகள் :நாம் மெல்லிய துணிகளை உடுத்தியிருந்தாலே அதன் வழியாக கொசுக்கள் கடித்துக் கொண்டிருக்கும். அதிலும், உடல் பாகங்களை முழுமையாக மூடாவிட்டால், அதன் கொடுமை இன்னும் அதிகமாகிவிடும். ஆகவே, உடல் முழுவதையும் மறைக்கும் வகையிலான ஆடைகளையே நாம் அணிய வேண்டும். குறிப்பாக மெல்லிய நிறம் கொண்ட ஆடைகளைக் கண்டால் கொசுக்கள் அவ்வளவாக நெருங்கி வராதாம்.

  MORE
  GALLERIES

 • 56

  நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் டெங்கு - முன் தடுப்பு நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

  கொசு தடுப்புகள் :மழைக்காலம் என்பதால் வீட்டை சுற்றி கொசு ஏதேனும் ஒரு வகையில் உற்பத்தியாகி, நம்மை கடிப்பதற்காக வீடுகளுக்குள் படையெடுத்து வரும். ஆகவே, தேவைப்படும் நேரங்களில் கொசுவிரட்டி லிக்யூட்களை பயன்படுத்த வேண்டும். வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகளில் கொசு வலை கட்டுவது அவசியமாகும். இரவு தூங்கச் செல்லும்போது கொசுவலை போர்த்திய மெத்தையில் தூங்குவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 66

  நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் டெங்கு - முன் தடுப்பு நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

  உற்பத்தியிடங்களை அழிக்க வேண்டும்:டெங்குவை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் அதிகம் வளரும். ஆகவே, மழைக்காலங்களில் வீட்டை சுற்றி கிடக்கும் தேங்காய் சிரட்டைகள், பழைய பக்கெட்டுகள், டயர்கள், செடிகளுக்கான தொட்டிகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குளியல் அறை, கழிவறை போன்ற இடங்களில் உள்ள ஈரம் உடனுக்குடன் காயும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். சுருக்கமாக சொன்னால், வீட்டின் எந்தப் பகுதியிலும் திறந்த நிலையில் தண்ணீர் இருக்கக் கூடாது.

  MORE
  GALLERIES