தலைநகர் டெல்லியில் உள்ள நசார்ப்கார்க்கைச் சேர்ந்த சாஹில் கெலாட் ( வயது 24) தாபா உணவகம் நடத்தி வருகிறார். இவருக்கும் டெல்லியில் தங்கி மருத்துவப் பயிற்சி படிப்பு படித்து வந்த ஹரியானாவைச் சேர்ந்த 25 வயதான நிக்கி யாதவுக்கும் பேருந்தில் செல்லும்போது காதல் மலர்ந்துள்ளது. நிக்கி யாதவ் படிக்கச் செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இவர்கள் பார்க், தியேட்டர் என தங்களது காதலை வளர்த்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் சாஹிலை அவரது சொந்த கிராமத்தில் வைத்து கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் டெல்லியில் தனது காதலியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து ப்ரிட்ஜில் வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதேபோன்றதோரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது டெல்லியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.