அடுத்த ஓராண்டில் சமையல் எரிவாயு மானியத்தை முற்றிலுமாக கைவிட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
2/ 5
தற்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுதோறும் மானிய விலையில் 12 சிலிண்டர்களை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
3/ 5
மானியத்துடனான ஒரு சிலிண்டரின் விலை 544 ரூபாயாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு சிலிண்டருக்கும் 190 ரூபாய் மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது.
4/ 5
கடந்த ஜூலை முதல் ஜனவரி மாதம் வரை மானிய சிலிண்டரின் விலை 63 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது.
5/ 5
இதனைப் பயன்படுத்தி, ஒவ்வொரு மாதமும் 10 ரூபாய் வீதம் உயர்த்தி, 2022-ம் ஆண்டில் மானியத்தை முற்றிலும் கைவிட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.