விமானங்கள் காணாமல் போவது அவ்வப்போது கேள்விப்பட கூடிய செய்தியாக இருந்து வருகிறது. இது இன்று நேற்று நடந்து வருகின்ற ஒரு நிகழ்வாக இருப்பதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே இது போன்று விமானங்கள் காணாமல் போய் உள்ளது. குறிப்பாக உலக போர்களின் போது சில விமானங்கள் தொலைந்து போய் உள்ளது. இவற்றை பல ஆண்டுகளாக தேடி வந்தனர். அதன் பிறகு அதற்கான முயற்சிகளை கைவிட்டு விட்டனர்.
இந்நிலையில் இரண்டாம் உலக போரின் போது காணாமல் போன விமானம் ஒன்று, 77 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இமய மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. C-46 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போக்குவரத்து விமானம் 1945 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் அருணாச்சல பிரதேசத்தின் ஒரு மலைப் பகுதியில் புயல் காலநிலையில் காணாமல் போனது. தெற்கு சீனாவின் குன்மிங்கிலிருந்து சுமார் 13 பேரை இது ஏற்றிச் சென்றது. விமானத்துடன் சேர்த்து அதில் பயணித்தவர்களும் மறைந்து போனார்கள்.
இந்த பயணத்தில் கிளேட்டன் மற்றும் உள்ளூர் லிசு இனக்குழுவைச் சேர்ந்த வழிகாட்டிகள் குழு ஆகியோர் இணைந்து, மார்பு வரை நீருள்ள ஆழமான ஆறுகள் மற்றும் அதிக உயரத்தில் உறைபனி வெப்பநிலையில் முகாமிட்டனர். இது ஒரு அபாயகரமான பணியாகும். 2018 ஆம் ஆண்டில் மூன்று லிசு வேட்டைக்காரர்கள் செப்டம்பர் மாத பனிப்புயலில் சிக்கினர். அந்த பகுதியில் தாழ்வெப்பநிலை காரணமாக அவர்கள் இறந்தனர் என்று கிளேட்டன் குறிப்பிட்டிருந்தார்.
உயிருடன் மீதம் இருந்தவர்களுடன் தனது பயணத்தை இமய மலையில் இவர் தொடர்ந்துள்ளார். அதன்படி, பல ஆண்டு கால விடாமுயற்சிக்கு பிறகு இரண்டாம் உலக போரில் காணாமல் போன விமானத்தை கண்டுபிடித்துள்ளனர். ஆனால், அந்த விமானத்தின் அருகில் எந்த ஒரு மனித தடயங்களும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். எப்படியோ ஒருவழியாக இந்த விமானத்தையாவது கண்டுபிடித்து விட்டதால் மாபெரும் ஆனந்தத்தில் இவர்கள் இருக்கின்றனர்.
இது குறித்து விமானத்தில் தொலைந்து போன ஒருவரின் மகனிடம் கேட்டபோது "நான் தந்தை இல்லாமல் வளர்ந்தேன். என் அம்மாவைப் பற்றி நான் நினைப்பது, ஒரு தந்தியைப் பெறுவது மற்றும் என் அப்பாவை காணவில்லை என்பதைக் கண்டுபிடிப்பது ஆகியவையே எனது முக்கிய நோக்கமாக இருந்தது. மேலும் எனக்கு 13 மாத ஆண் குழந்தையும் உள்ளது." என்று அவர் கூறினார்.