முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

Corona Cases in India | இந்தியாவில் கடந்த சில நாட்களாக சரிந்து வந்த கொரோனா தினசரி பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் சற்று அதிகரித்துள்ளது.

 • 14

  இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

  இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை 2 லட்சத்து 85 ஆயிரமாக இருந்த நிலையில், புதன்கிழமை இந்த பாதிப்பு எண்ணிக்கை 2லட்சத்து 86 ஆயிரத்து 384 ஆக உயர்ந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 24

  இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

  நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 49,771 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் 48 ஆயிரமாகவும், மகாராஷ்டிராவில் 35 ஆயிரமாகவும் தொற்று பதிவாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 34

  இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

  நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 3 லட்சத்து 71 ஆயிரத்து 500 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 573 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 44

  இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

  இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4லட்சத்து 91 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது புதிதாக 3 லட்சத்து 6 ஆயிரத்து 357 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 22 லட்சத்து 2 ஆயிரமாக குறைந்துள்ளது. இதுவரை 163 கோடியே 84 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES