இந்தியாவின் அரசியல் சாணக்கியர் என்று புகழப்படுபவர் தேர்தல் வியூகங்களை அமைத்து தரும் ஐபேக் நிறுவனத்தை நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர். இவர் ஏற்கனவே தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மட்டுமல்லாது மாநிலக் கட்சிகளான திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் போன்ற பல கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து அக்கட்சிகள் வெற்றி பெறுவதில் உறுதுணையாக இருந்திருக்கிறார்.
பிரசாந்த் கிஷோர் 2024 தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியில் இணைவார் என பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், திடீரென மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் வியூகங்களை அமைத்துத் தரும் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் திரிணாமுல் காங்கிரஸை தேசிய அரசியலுக்கு நகர்த்தி 2024ல் மையப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.