முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » கருப்பு உருளைக்கிழங்கில் இவ்வளவு நன்மைகளா?- சாகுபடியில் அசத்தும் பீகார் விவசாயி!

கருப்பு உருளைக்கிழங்கில் இவ்வளவு நன்மைகளா?- சாகுபடியில் அசத்தும் பீகார் விவசாயி!

பஞ்சாப், சத்தீஸ்கர் மாநில விவசாயிகளிடமிருந்து இந்த உருளைக் கிழங்குகளுக்கு தேவை அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

  • 16

    கருப்பு உருளைக்கிழங்கில் இவ்வளவு நன்மைகளா?- சாகுபடியில் அசத்தும் பீகார் விவசாயி!

    பீகார் மாநிலம் கயா பகுதியில் ஆஷிஷ் குமார் சிங் என்ற விவசாயி கடந்த நவம்பர் 10 ஆம் தேதி 14 கிலோகிராம் கருப்பு உருளைக் கிழங்கு விதைகளை விதைத்திருக்கிறார். சரியாக 120 நாட்களுக்கு பிறகு கடந்த 13 ஆம் தேதி 120 கிலோ கிராம் கருப்பு உருளைக் கிழங்குகள் கிடைத்திருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 26

    கருப்பு உருளைக்கிழங்கில் இவ்வளவு நன்மைகளா?- சாகுபடியில் அசத்தும் பீகார் விவசாயி!

    பொதுவாக கருப்பு உருளைக் கிழங்குகள் அமெரிக்காவின் மலைப் பகுதிகளிலும் மட்டுமே விலையும். தற்போது பரிசோதனை முயற்சியாக பீகார் மாநிலம் கயா பகுதியில் பயிரிடப்பட்டது.இதற்காக அமெரிக்காவிலிருந்து 14கிலோகிராம் விதைகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 36

    கருப்பு உருளைக்கிழங்கில் இவ்வளவு நன்மைகளா?- சாகுபடியில் அசத்தும் பீகார் விவசாயி!

    கருப்பு உருளைக் கிழங்குகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைப்பதாக கூறப்படுகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு, புற்றுநோய் பாதிப்பிலிருந்தும் பாதுகாப்பதாக கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 46

    கருப்பு உருளைக்கிழங்கில் இவ்வளவு நன்மைகளா?- சாகுபடியில் அசத்தும் பீகார் விவசாயி!

    இதுகுறித்து ஆஷிஷ் நியூஸ் 18க்கு அளித்த பேட்டியில், அடுத்த ஆண்டு கருப்பு உருளைக் கிழங்குகளை பெரிய அளவில் பயிரிட திட்டமிட்டிருக்கிறேன். இந்த முறை 14 கிலோகிராம் உருளைக்கிழங்குகளை பரிசோதனை முயற்சியாக பயிரிட்டேன். மேலும் இந்த உருளைக் கிழங்குகளை கிலோவுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை விற்க திட்டமிட்டிருக்கிறேன்.

    MORE
    GALLERIES

  • 56

    கருப்பு உருளைக்கிழங்கில் இவ்வளவு நன்மைகளா?- சாகுபடியில் அசத்தும் பீகார் விவசாயி!

    மேலும் சுற்றியுள்ள கிராமங்களில் பீகார் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உருளைக் கிழங்குகளை அளித்து அவர்களை ஊக்குவிக்கவுள்ளதாகவும் ஆஷிஷ் தெரிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 66

    கருப்பு உருளைக்கிழங்கில் இவ்வளவு நன்மைகளா?- சாகுபடியில் அசத்தும் பீகார் விவசாயி!

    மேலும் பஞ்சாப், சத்தீஸ்கர் மாநில விவசாயிகளிடமிருந்து இந்த உருளைக் கிழங்குகளுக்கு தேவை அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். யூடியூப் மூலம் இந்த கருப்பு உருளைக்கிழங்குகளை பற்றி அறிந்துகொண்டதாக ஆஷிஷ் தெரிவித்தார்.

    MORE
    GALLERIES