இந்தக் கலை முயற்சிக்குப் பின்னணியில் உந்து சக்தியாக இருப்பவர் பள்ளியின் ஓவிய ஆசிரியர் உமாபதி. அவரது பயிற்சியில் ஏற்கனவே மாணவர்கள் கிராமங்களில் கிடைக்கக்கூடிய பொருட்களான சோளம், இலை, தென்னை, குறும்பு, மூங்கில், மர பட்டைகள் கொண்டு "வீடு தோறும் தேசியக்கொடி ஏற்றுவோம்" என்ற விழிப்புணர்வு பொம்மையை வடிவமைத்தனர்.