அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளத்தில் சிக்கி 50-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன.
2/ 13
புலிகள் மற்றும் காண்டாமிருகங்கள் அருகில் உள்ள கிராமப் பகுதிகளில் தஞ்சமடைந்திருப்பதால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ள்ளனர்.
3/ 13
அசாம் மாநிலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகளும், அதன் துணை ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
4/ 13
இதனால் அங்குள்ள 27 மாவட்டங்களில் சுமார் 2 ஆயிரத்து 800 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.
5/ 13
இதையடுத்து அங்கு வசித்த 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
6/ 13
இந்நிலையில், உலகின் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட காசிரங்கா தேசிய பூங்காவும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
7/ 13
சுமார் 430 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த பூங்காவின் 95 சதவீகித பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
8/ 13
இதனால் இதுவரை 50க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்துவிட்ட நிலையில், 100க்கும் மேற்பட்ட மான், காண்டாமிருகம் உள்ளிட்ட விலங்குகளை வனத்துறை ஊழியர்கள் மீட்டுள்ளனர்.
9/ 13
இருப்பினும், ஏராளமான விலங்குகள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன..
10/ 13
வசிப்பிடங்கள் தண்ணீரில் மூழ்கியதால், பூங்காவில் இருந்து வெளியேறிய புலி, காண்டாமிருகம், மான் உள்ளிட்ட விலங்குகள் அருகில் உள்ள கிராமப் பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளன.
11/ 13
இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
12/ 13
காண்டாமிருகம், மான் உள்ளிட்ட விலங்குகள் சாலைகளில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
13/ 13
இதையடுத்து, வனவிலங்குகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, கிராமப் பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள விலங்குகளையும் வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.