ஹோம் » போடோகல்லெரி » இந்தியா » முகேஷ் அம்பானியின் வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சென்ட் செய்த அரங்கேற்றம்..!

முகேஷ் அம்பானியின் வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சென்ட் செய்த அரங்கேற்றம்..!

முகேஷ் அம்பானி, நிடா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் வருங்கால மனைவியான ராதிகா மெர்ச்சென்ட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம் இப்போது மீண்டும் அனைவரின் கவனத்திற்கு வந்துள்ளது.

 • 16

  முகேஷ் அம்பானியின் வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சென்ட் செய்த அரங்கேற்றம்..!

  முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு இன்று நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இதனைத்தொடர்ந்து அவரைப் பற்றிய செய்திகள் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு பரதநாட்டிய வீடியோ இப்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. முகேஷ் அம்பானி, நிடா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் வருங்கால மனைவியான ராதிகா மெர்ச்சென்ட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம்தான் அது. கடந்த ஜூன் 6ஆம் தேதி நடைப்பெற்ற அரங்கேற்றம் இப்போது மீண்டும் அனைவரின் கவனத்திற்கு வந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 26

  முகேஷ் அம்பானியின் வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சென்ட் செய்த அரங்கேற்றம்..!

  ஜியோ உலக சென்டரிலுள்ள க்ராண்ட் திரையரங்கில் நடைபெற்ற ராதிகாவின் முதல் தனி பரதநாட்டிய நடனத்தைக் காண ஏராளமானோர் கூடினர். 

  MORE
  GALLERIES

 • 36

  முகேஷ் அம்பானியின் வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சென்ட் செய்த அரங்கேற்றம்..!

  அம்பானி குடும்பத்தினர் மற்றும் மெர்சென்ட்டின் குடும்பத்தினர் அனைவரும் இந்த அரங்கேற்றத்தில் பங்கேற்றனர்.

  MORE
  GALLERIES

 • 46

  முகேஷ் அம்பானியின் வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சென்ட் செய்த அரங்கேற்றம்..!

  ராதிகாவின் முதல் அரங்கேற்றம், உலகின் பழமையான பாரம்பரியமான கலைக்கு ஒரு புதிய கலைஞரைக் கொண்டுவந்து கொடுத்துள்ளது. நீடா அம்பானிக்குப் பிறகு அம்பானியின் குடும்பத்தில் இரண்டாவது பரதநாட்டியக் கலைஞராகிறார் ராதிகா.

  MORE
  GALLERIES

 • 56

  முகேஷ் அம்பானியின் வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சென்ட் செய்த அரங்கேற்றம்..!

  ராதிகாவின் நடனம், அரங்கேற்றத்திலுள்ள பாரம்பரிய அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. புஷ்பாஞ்சலியுடன் தொடங்கி மேடையிலுள்ள கடவுள்கள், குரு மற்றும் பார்வையாளர்களின் ஆசிர்வாதங்களை வணங்கிக் கேட்டுக்கொண்டார். உடனடியாக அதன் தொடர்ச்சியாக கணேஷ் வந்தனா மற்றும் பாரம்பிய அலாரிபு நடனத்தை செய்தார்.

  MORE
  GALLERIES

 • 66

  முகேஷ் அம்பானியின் வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சென்ட் செய்த அரங்கேற்றம்..!

  ராகாமாலிகா இசைக்கு அச்யுதம் கேசவத்தையும், ராமரின் ஏக்கமான ஷாப்ரி, கிருஷ்ணரின் நடனம், மற்றும் யசோதா மற்றும் குழந்தை கிருஷ்ணர் ஆகிய மூன்று கதைகளைச் சொன்னார். வலிமையான நடராஜரின் அழிவில்லா நடனத்தை விளக்க சிவா பஞ்சாக்ஷ்ராவை நடனமாக்கினார். அதன்பின்னர், அஷ்டரசா என்று அழைக்கப்படும் அடிப்படையான எட்டு மனித உணர்களை நாட்டியக் கலைகள் மூலம் விளக்கினார். அதில், அன்பு, சிரிப்பு கருணை, பயம், வீரம், கோபம், வெறுப்பு, ஆச்சர்யம் ஆகிய பாவணைகளை வெளிப்படுத்தினார். நடனத்துடன் சேர்ந்த முகபாவனைகள் மூலம் பார்வையாளர்களை ராதிகா ஆச்சர்யப்படுத்தினார். 

  MORE
  GALLERIES