ஷைலா - வீரேன் மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் நிதா - முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி ஆகியோரின் திருமண நிச்சயதார்த்த விழா இன்று ராஜஸ்தானில் நாதுவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் நடைபெற்றது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ ஆனந்த் அம்பானி, மெர்ச்சன்ட் தம்பதியினர் ஸ்ரீநாத்ஜி கோவிலில் தரிசனம் பெற்றனர்.