இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது. என்கோர் ஹெல்த்கேர் CEO விரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் தான் ராதிகா மெர்ச்சன்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் நண்பர்கள் சூழ இன்று மாலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. குஜராத்தை சேர்ந்த இந்துக்களால் கடைபிடிக்கப்படும் கோல் தானா (Gol Dhana) மற்றும் சுனரி விதி (Chunari Vidhi) சடங்குகளுடன் இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில் கோல் தனா என்பது நிச்சயதார்த்தத்திற்கு முன் கடைபிடிக்கப்படும் ஒரு சடங்கு. மணமகளின் குடும்பத்தினர் மணமகனின் வீட்டுக்கு பரிசுகள், இனிப்புகளுடன் வருவர். பின்னர் மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்வர். மோதிரம் மாற்றிக்கொண்டதற்கு பின் மணமக்கள் இருவரும் குடும்பத்தின் மூத்தவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவர்.