முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » ஆப்பிள் குளிர் பிரதேசங்களில் தான் வளரும் என்று யார் சொன்னது? வெப்பம் மிகுந்த ஊரில் ஆப்பிள்களை வளர்த்து வரும் விவசாயி

ஆப்பிள் குளிர் பிரதேசங்களில் தான் வளரும் என்று யார் சொன்னது? வெப்பம் மிகுந்த ஊரில் ஆப்பிள்களை வளர்த்து வரும் விவசாயி

மேற்கு வங்காளத்தின் அரம்பாக்கில் பிடிஓவாக இருக்கும் கௌசிக் பானர்ஜி என்பவர் ஹூக்ளியில் உள்ள சக்பேஷியா என்ற கிராமத்தில் தனது சொந்த நிலத்தில் பச்சை நிற ஆப்பிள்களை வளர்த்துக் கொண்டு வருகிறார். 

 • 16

  ஆப்பிள் குளிர் பிரதேசங்களில் தான் வளரும் என்று யார் சொன்னது? வெப்பம் மிகுந்த ஊரில் ஆப்பிள்களை வளர்த்து வரும் விவசாயி

  நம் அனைவருக்குமே ஆப்பிள்கள் காஷ்மீர் போன்ற குளிர் பிரதேசங்களில் நன்றாக வளரும் என்பது தெரியும். ஆனால், இதனை முறியடிக்கும் விதத்தில், மேற்கு வங்காளத்தின் அரம்பாக்கில் பிடிஓவாக இருக்கும் கௌசிக் பானர்ஜி என்பவர் ஹூக்ளியில் உள்ள சக்பேஷியா என்ற வெப்பம் மிகுந்த கிராமத்தில் தனது சொந்த நிலத்தில் சிறந்த தரத்திலான பச்சை நிற ஆப்பிள்களை வளர்த்துக் கொண்டு வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 26

  ஆப்பிள் குளிர் பிரதேசங்களில் தான் வளரும் என்று யார் சொன்னது? வெப்பம் மிகுந்த ஊரில் ஆப்பிள்களை வளர்த்து வரும் விவசாயி

  பானர்ஜி சென்ற வருடம் தனக்கு சொந்தமான இடத்தில் 152 மரக்கன்றுகளை நட்டு உள்ளார். அதில் சுமார் 130 மரங்கள் வெப்பத்தில் இருந்து பிழைத்து ஆப்பிள்களைக் கொடுக்கத் தொடங்கி உள்ளன. உள்ளூர் பஞ்சாயத்து தலைவரான ஷா முகமது ரபீக் அவர்கள் கூறுகையில், பானர்ஜியின் செயல் இந்தப் பகுதியில் உள்ள மற்ற விவசாயிகளும் இது போன்று ஆப்பிள் மரங்களை வளர்த்து அதிக லாபம் ஈட்ட ஊக்குவிக்கும்.

  MORE
  GALLERIES

 • 36

  ஆப்பிள் குளிர் பிரதேசங்களில் தான் வளரும் என்று யார் சொன்னது? வெப்பம் மிகுந்த ஊரில் ஆப்பிள்களை வளர்த்து வரும் விவசாயி

  பங்குரா மாவட்டத்தில் உள்ள தாமோதர்பூரில் அமைந்துள்ள பரஷ்மணி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையானது இந்திய விவசாய அமைப்பு ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து சோதனை முறையில் ஆப்பிள்களை, குறிப்பாக, அன்னா, டோசார்ட் கோல்டன், எச்ஆர்எம்என்-99 போன்ற ஆப்பிள் வகைகள், வளர்த்து வருகிறது. பரஷ்மணியில் சுமார் 80 ஆப்பிள் மரங்கள் நடப்பட்டு உள்ளன.

  MORE
  GALLERIES

 • 46

  ஆப்பிள் குளிர் பிரதேசங்களில் தான் வளரும் என்று யார் சொன்னது? வெப்பம் மிகுந்த ஊரில் ஆப்பிள்களை வளர்த்து வரும் விவசாயி

  இது சுமார் மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதனைச் செய்ய குறைந்தது ஐந்து வருட அனுபவம் தேவை. வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் உரிமையாளர் ஆன சித்தார்த் சென் அவர்கள் கூறுகையில், "கடந்த மூன்று ஆண்டுகளாக, கிட்டத்தட்ட அனைத்து மரங்களும் காய்க்கத் தொடங்கி விட்டது. இதற்கு எவ்வளவு தண்ணீர் மற்றும் மினரல்கள் தேவை என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறோம்.

  MORE
  GALLERIES

 • 56

  ஆப்பிள் குளிர் பிரதேசங்களில் தான் வளரும் என்று யார் சொன்னது? வெப்பம் மிகுந்த ஊரில் ஆப்பிள்களை வளர்த்து வரும் விவசாயி

  இது போன்று செம்மண்ணில் ஆப்பிள் வளர்த்தால், அது விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.இது குறித்து மாவட்ட தோட்டக்கலை துறையின் கள அலுவலரான சஞ்சய் சென்குப்தா அவர்கள் கூறுகையில், ''பங்குரா மாவட்டத்தின் செம்மண்ணும், அந்த மாவட்டத்தின் சீதோஷ்ண நிலையும் இஸ்ரேலைப் போன்று பச்சை அன்னா வகை ஆப்பிள் வளர்ப்புக்கு ஏற்றதாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 66

  ஆப்பிள் குளிர் பிரதேசங்களில் தான் வளரும் என்று யார் சொன்னது? வெப்பம் மிகுந்த ஊரில் ஆப்பிள்களை வளர்த்து வரும் விவசாயி

  இதில் உள்ள ஒரே தடை என்னவென்றால், பழம் உருவாகத் தொடங்கும் போது உள்ள வெப்பநிலை தான். அன்னா ஆப்பிள் வகை அல்லது பச்சை நிற ஆப்பிள் வகை உற்பத்திக்கு வெப்பநிலை குறைந்தபட்சம் 8 டிகிரி ஆக இருக்க வேண்டும். ஆனால், பங்குரா மாவட்டத்தைப் பொறுத்த வரை, இந்த வெப்பநிலை அரிதாகவே காணப்படும். நாம் ஆப்பிள்களை அறுவடை செய்த பின்னர், ஆப்பிள்கள் சுமார் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தாங்கக் கூடியதாக இருக்கும்," என்று தெரிவித்தார்.

  MORE
  GALLERIES