தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் ஏழுமலையானை வழிபட்டார். சாமி தரிசனத்திற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த அவர் நேற்று இரவு வராக சாமியை வழிபட்டார். தொடர்ந்து திருப்பதி மலையில் இரவு தங்கிய அவர் இன்று காலை கோயிலுக்கு சென்று அஷ்டதல பாத பத்மாராதனை சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். தொடர்ந்து கோவிலுக்கு எதிரில் இருக்கும் அகிலாண்டம் பகுதிக்கு சென்ற அவர் அங்கு தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினார்.