இது குறித்து டொமினிகா நாட்டின் பிரதமர் ரூஸ்வெல்ட் கெர்ட் பேசுகையில், மண்வளம் காப்போம் இயக்கத்திற்கு எங்கள் முழு ஆதரவையும் நாங்கள் தருகின்றோம். விவசாயம் தான் முக்கியமான ஒன்று அது சிறப்பாக நடந்தால் மட்டுமே மக்களுக்கு உணவு அளிக்க முடியும். விவசாயம் சிறப்பாக நடைபெற மண்வளம் முக்கியம் மண்வளத்தை பாதுகாப்பது அவசியமான ஒன்று என கூறியுள்ளார்.
இறுதியாக மண்வளம் பாதுகாப்பு குறித்து பேசிய சத்குரு, பூமியில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்காகவும் கட்டாயம் மண் வளம் காக்கப்பட வேண்டும். காக்க முடியும் என்பதற்கு கரீபியன் நாடுகள் சிறந்த எடுத்துக்காட்டு. கடலில் இருக்கும் முத்துக்களை போல் இருக்கும் இந்த சிறிய நாடுகள் மண்வளத்தை மீட்டெடுக்க உறுதி எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
மண் என்பது உயிரற்ற பொருள் அல்ல. அதனை எவ்விதமாகவும் நாம் நமது தேவைக்கேற்றார் போல் பயன்படுத்தலாம் என்பதும் தவறான அணுகுமுறை. மண் என்பது உயிர் சக்தி உடைய ஒன்று. மண்ணுக்கு உயிர் உள்ளது. தற்கால இளைஞர்களுக்கும், எதிர்கால தலைமுறைக்கும் நாம் சொல்ல வேண்டிய மிக முக்கியமான செய்தி மண்ணுக்கும் உயிர் உள்ளது என சத்குரு கூறியுள்ளார்.