இந்தியாவை அடுத்து ஆளப் போவது யார் என்ற எதிர்பார்புடன் நிகழ்ந்த நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட செய்தியாக இருக்கிறது. அதில் பலரும் தேர்தல் இறுதி முடிவுகளை தெரிந்துகொள்ளவே ஆவலோடு இணையத்தில் தேடியுள்ளனர். முக்கியமாக இந்திய அளவில் வேலூர் தொகுதி பலராலும் தேடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் சாதனை நிகழ்த்தப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் இந்தியாவே விழித்திருந்து கண்காணித்தது சந்திராயன் 2. அது வெற்றியடையாவிட்டாலும் இந்தியாவின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது என்பதே உலகளவில் பேசப்பட்டது. சந்திராயன் 2 அப்டேட், தரை இறங்கிய செய்தி, விண்ணில் செலுத்தப்பட்ட லைவ் காட்சிகள் என இவைதான் மக்கள் அதிகமாக பார்த்தது.
இந்த ஆண்டு தீவிர தாக்கத்தை ஏற்படுத்திய மத்திய அரசு அறிவிப்புகளில் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததும் முக்கியமான ஒன்று. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் இந்தியர்கள் சட்டப்பிரிவு 370 என்றால் என்ன மற்றும் அதுகுறித்த அப்டேட்டுகளை தெரிந்துகொள்ள கூகுளை பயன்படுத்தியுள்ளனர்.
ஐயர்ன் மேன் படத்தில் ஜோக்கரை ரசித்த ரசிகர்களுக்காக பிரத்யேகமாக எடுக்கப்பட்ட படம்தான் ஜோக்கர். அந்த படம் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் ஹிட் அடித்தது மட்டுமன்றி பெரும் தாக்கத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த படத்தை ஆன்லைனில் பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் கூகுளில் மக்கள் ஜோக்கர் படத்தை தேடியுள்ளனர்.